மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிவாரி பகுதியில் நேற்று (14.09.2021) காலை அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்தார். அப்போது விழா மேடை அருகே அமர்ந்திருந்த பொதுமக்களில் சிலர் முதல்வரைப் பார்த்து ஆவேசமாக கத்தியுள்ளனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்த சவுஹான், அவர்களை அமைதிப்படுத்தி, எதற்காக அவேசமாகப் பேசுகிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து குற்றச்சாட்டுக்குள்ளான அந்த அதிகாரியை மேடையில் இருந்தவாறு முதல்வர் சஸ்பெண்ட் செய்தார். மேலும், அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டு உறுதியானால் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.