ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை
போலீசார் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது அருங்குளம் கிராமம். இங்கு நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 கார்கள் நிற்பதாக கே.கே.சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அவர்களை கண்ட மர்மநபர்கள், காரில் இருந்து தப்பியோடிவிட்டனர். 2 கார்களை சோதனை செய்ததில், ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு செம்மரக்கட்டைகள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இரு கார்களை பறிமுதல் செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்தனர்.