அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த 18 தேதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியாவிலுள்ள கபில் தேவ், கவாஸ்கர், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து மட்டும் அந்த விழாவில் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் கலந்துகொண்ட சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்தார் இதற்கு பாரதிய ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ராஷ்ட்ரிய பஞ்ரங் தளம் கட்சியின் ஆக்ரா பிரிவு என்ற இந்து அமைப்பு சித்து நம் நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டார். சித்துவின் தலையை வெட்டி கொண்டுவருபவருக்கு 5 லட்சம் பரிசு என கூறியள்ளனர்.
அதேபோல் பீஹார் கோர்ட்டில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சித்து மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யக்கோரியும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.