உலகின் பல்வேறு நாடுகளில் 15 வயதை கடந்த குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஜனவரி 10ம் தேதி முதல் கடந்த 4 வாரங்களாக 15 முதல் 18 வயது உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு துரித கதியில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 15 வயதை கடந்த சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது.
மேலும் நாடு முழுவதும் 80 சதவீதம் அளவிற்கு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் அருகில் வேறு பள்ளியில் நடைபெறும் முகாம்களிலோ அல்லது மாவட்ட மருத்துவமனைகளில் சென்றோ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை இந்தியா முழுவதும் 5 கோடி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே மாணவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.