8 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை நடத்துகிறது மத்திய அரசு.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், கரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 43வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இருந்து இன்று (28/05/2021) காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடத்துகிறார். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், மத்திய நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.