Skip to main content

சாலியாற்றில் அடித்து வந்த 38 உடல்கள்; அடையாளம் காண ஏற்பாடு

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
38 bodies washed up in Saliya; Provision for identification

கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலை சரிவில் 191 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 38 பேரின் உடல்களை அடையாளம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சூரல்மலா மற்றும் முண்டகை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் பகுதிக்குச் சென்றது. அங்குள்ள சாலியாறு பகுதியில் சுமார் 38 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கேரளா மேப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் சிக்கியவர்களை உறவினர்கள் தேடி வரும் நிலையில் 38 உடல்கள் சாலியாறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேப்பாடி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்