பல வருடங்களாக நிலுவையில் இருந்த மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவை ஒப்புதலையும் பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாளை புதிய நாடாளுமன்றத்திற்கு இடம் மாறும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் பெறுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.