ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் உம்மிடிவரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ராவ். இவர் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் 20 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டினார். பின்னர் அதனை கைவிட்டு, அந்த கிணற்றை மூடாமல் விட்டுவிட்டார். மல்லிகார்ஜுன ராவின் 2 வயது மகன் சந்திரசேகர் நேற்று அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அவன் திடீரென அந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதில் அவன் 20 அடி ஆழத்துக்கு சென்று சிக்கிக்கொண்டான். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.