
புதுச்சேரியில் விபச்சார வழக்கில் சிக்கிய 5 பேரில் இருவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதி, கச்சேரி வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. அதையடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது தனி அறையில் இருந்த 4 பெண்களை மீட்டனர். மேலும் இதில் ஸ்பா உரிமையாளர், மேலாளர் மற்றும் 5 வாடிக்கையாளர்கள் பிடிபட்டனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கைதானவர்களை உடனே மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் வினோத் என்பவர் சென்னை ஆவடி ஆயுதப்படை காவலர் எனவும், நட்ராஜ் என்பவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு காவல்துறை தலைமைக்குப் புதுச்சேரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.