இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதனிடையே கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுவரை 27.90 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் வீணாக்கப்பட்ட தடுப்பூசிகளோடு சேர்த்து, 25 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரத்து 825 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 2 கோடியே 58 லட்சத்து 405 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்களிடமும் யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 19 லட்சத்து 95 ஆயிரத்து 770 தடுப்பூசி டோஸ்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.