தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் தென்னப்பிரிக்காவை சேர்ந்தவர். இன்னொருவர் அம்மாநிலத்தை சேர்ந்த மருத்துவர்.
இதில் மருத்துவர் வெளிநாடு எதற்கும் சென்றுவரதா நிலையில், அவருக்கு ஒமிக்ரான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தசூழலில் நவம்பர் 12 முதல் 22 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வந்த 10 தென்னாபிப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் மயமாகியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அவர்களது தொலைபேசி எண்கள் அணைத்து வைக்கபட்டிருப்பதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அரசு அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே இந்த தகவல் குறித்து பேசியுள்ள பெங்களூர் மாநகராட்சி ஆணையர், "இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் நேரடியாக எந்த தகவலும் இல்லை. அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், நிலைமையைச் சமாளிக்க நிலையான நெறிமுறைகள் உள்ளன என்பதை என்னால் கூற முடியும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறியுள்ளார்.