Skip to main content

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு! 

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

0.5% interest rate hike for bank loans!

 

இன்று (08/06/2022) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், "வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 4.90% ஆக உயர்ந்துள்ளது. உக்ரைனில் நடந்த போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது; அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6%- க்கும் மேல் இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2% ஆக இருக்கும். கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9% ஆக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்