Published on 20/11/2020 | Edited on 20/11/2020

மருத்துவர்களின் அறிவுரையைத் தொடர்ந்து சோனியா காந்தி டெல்லியிலிருந்து கோவா வந்தடைந்துள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மார்புத்தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் கோவா செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தியுடன் இன்று மதியம் கோவா தலைநகர் பனாஜியை வந்தடைந்தார் சோனியா காந்தி. அடுத்த ஒருசில நாட்களுக்கு அவர் கோவாவில் தங்கியிருந்து தனது உடல்நிலையில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.