Skip to main content

’’வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்தோம்’’ - காவல்துறை விளக்கம்

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
nn

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.  மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

t1

 

இது  குறித்து காவல் துறையினர் விளக்க அறிக்கையில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டு, அக்கும்பல் பொதுமக்கள் உயிருகும் பொதுச்சொத்துக்களுக்கும் ஆபத்து விளவிப்பதை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் , காவல்துறையினர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதால் வேறுவழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனையடுத்து அக்கும்பல் அப்பகுதியில் இருந்து கலைந்தது.  இந்த சம்பவங்களின் போது சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

 

t2

 

தூத்துக்குடியில் அமைதி நிலவ சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்