Skip to main content

அமைச்சரிடமே டோக்கன் அட்வான்ஸ் கொடுங்கள்..! -வேலைக்கு லஞ்சம் கேட்கும் மா.செ.வின் ஆடியோ!

Published on 21/02/2021 | Edited on 21/02/2021
ttttt

 

'நான் அதிமுகவில் தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். எனது பெயர் ஜான். எனது வீடு அமைச்சர் வீட்டுக்கு பின்னால் இருக்கிறது, அமைச்சரின் சொந்த ஊர் கவுந்தப்பாடிதான், அமைச்சர் ஈரோடுதான், என்னுடைய பர்சனல் நம்பரையும் எழுதிக்கொள்ளுங்கள், ஒரு டோக்கன் மாதிரி கொண்டு வந்து அமைச்சரிடமே கொடுத்துவிடுங்கள். சென்னையில அமைச்சர் கருப்பண்ணன் வீடுன்னு கேட்டாவே வந்துருலாம்'' என்றும் ''மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி வாங்கித் தருவதாகவும்'' ஒரு பெண்ணிடம் பணம் கேட்கிறார் அதிமுகவைச் சேர்ந்த அந்த நிர்வாகி. இதேபோல் தொடர்ந்து பேசுகிறார். அதற்கு அந்தப் பெண், ''பணி ஆணை கையில் வந்தவுடன் தருகிறேன். இருப்பினும் நீங்கள் கேட்கும் தொகை அதிகமாக இருக்கிறது. அதனை எங்கள் குடும்பத்தால் கொடுக்க முடியாது, குறையுங்கள்'' என்கிறார். இதேபோல் பலரிடமும் அந்த நபர் பேசியிருப்பதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

அந்த ஆடியோக்கள் இதோ:-
முதல் ஆடியோ
ஹலோ
ஹலோ வினோதினிங்களாம்மா… நீங்க
மாசுக்கட்டுப்பாடு வாரியத்துல இருந்து நேத்து சொல்லியிருந்தங்களாம்மா…
ஆமா சொல்லுங்க சார்…
அமைச்சரை பார்க்கிறதுக்கு வரச்சொல்லியிருந்தம்ல…
ஆமாங்க சார்.
அதான் உடனடியா வர்றதுக்கு வாய்ப்பிருக்கா… இல்லை சென்னை வர்றீங்களா கேட்கதுக்குத்தான்…
சார் எங்க அவெலெய்பிள்…
நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கு ஈரோடு பக்கம் கவுண்டப்பாடில இருக்குறார்மா. நாளைக்கு நைட்டுப் புறப்பட்டு சென்னை வந்துர்றாம்மா. சென்னையில முதலமைச்சர் வீடு இருக்குல்ல க்ரீன்வேஸ் சாலை. அந்தச் சந்துல கடைசில வந்தா சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் வீடு எதுன்னு கேட்டுப் பார்த்தா சொல்லுவாங்கம்மா… எப்படி உங்களுக்கு அவெய்லபிளோ அப்படிப் பார்த்துக்கங்க… ஒன் வீக்ல ஆர்டர் கொடுத்துடுவாங்க. எந்த ப்ளேஸ் வேணுமோ வாங்கிக்கலாம். கடைசில இங்கேயோ… அங்கேயோனு தெரிஞ்சா சிக்கல்மா. நமக்குத்தான் கஷ்டம். அதுக்குத்தான் சொல்றேன். உங்களுக்கு எந்த ப்ளேஸ் வேணுமோ நேர்ல வந்து அங்கேயே வாங்கிக் கொடுத்துடறோம். 
இல்ல சார் மெரிட்ல சொன்னாங்களே சார்…
நீங்க திண்டுக்கல்ல இருக்கீங்க… உங்களை கொண்டுபோய் ஊட்டில போட்டுட்டா என்ன பண்ணுவீங்க… தமிழ்நாட்டுல எங்க வேணும்னா போடலாம். உங்களுக்குப் பக்கமா வாங்கறதுக்குத்தான் இந்தப் பிரச்சனையைச் சொல்றது.
ஓ.கே.ங்க சார்… பேமிலி பேக்ரவுண்ட்ங்கிற ஒண்ணு இருக்கே சார்…
சரிங்கம்மா… உங்களுக்கு எவ்வளவு முடியும்னு சொல்லுங்க… நாங்க அதுக்குத் தகுந்த மாதிரி பேசிமுடிக்கிறோம்.
இப்பதான் பேபிவேற பிறந்துருக்கு… அவ்வளவு வெல்ஃபேர் பேமிலியும் கிடையாது. இது எப்படிங்க சார், என்னோட ரிசல்ட் மார்க், இன்டர்வ்யூ மார்க் இரண்டு்மே தெரியுமா சார்…
வெள்ளிக்கிழமை அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் உங்க கைல கொடுக்குறோம். அதை வாங்கிக்கிட்டு எந்த இடம் வேணும்னு சொன்னீங்கன்னா நாங்க ப்ளேஸை போட்டுக் கொடுத்துடுவோம். அதுக்கோசரம்தான் இதைச் சொல்றது.
சரிங்க சார். இது புல்லா மெரிட்தான சார். இப்ப அமெளண்ட்னா எப்படி சார்
அதை நீங்கதான் சொல்லிக்கிறீங்க… உங்களுக்கு யார் சொன்னாங்க…
இது ஓப்பனாவே அமெளண்ட்னா அங்கேயே சொல்லியிருப்பாங்கல்ல… நோட்டிபிகேஷன்ல நாங்க பார்த்தோம்ல சார்…
அம்மா அப்படியெல்லாம் ஓப்பனா சொல்லமாட்டாங்க… உங்க பக்கத்துல அமைச்சர், எம்.எல்.ஏ. யாரும் இருந்தா கேட்டுப்பாருங்க…
இப்ப சப்போஸ் அமெளண்ட் இல்லைன்னா… போஸ்டிங் இல்லையா…
வாய்ப்பு இருக்குது… ஆனா வெளியில போட்டிருவாங்க. லோக்கல்ல தரமாட்டாங்க. தமிழ்நாட்டுக்குள்ள எங்க வேணா போடலாமில்ல… ரெகமெண்டேஷன்னா, நீங்க பக்கத்துல கேட்கிறதுக்கு ரெகமெண்டேஷன். எங்க வேணும்னா போய்க்கலாம்னா உங்க விருப்பம்.
ஃபர்ஸ்ட் முதல்ல ஜாப் இருந்தா தான சார்… எந்த ஒரு அஷ்யூரன்ஸும் இல்லைல…
இல்லைம்மா, அப்ப உங்க விருப்பம் எப்படியோ அப்படி பண்ணிக்கங்க…
புரியலைங்க சார்…
இவ்வளவுதான் சொல்லமுடியும். உங்க நன்மைக்குச் சொல்றேங்கிறபோது…
நீங்க அமெளண்ட்தான் பிக்ஸ்டு சொல்றீங்க. நான் மெரிட் கேண்டிடேட்னு அப்பவே தெரியும். இதுல டாப்ல இருக்கேன்னு எனக்கு பர்ஸ்ட்டே தெரியும் சார். நான் செலக்ட் ஆகலைன்னாலே ஒரு இஷ்யு ஆகும்ல…
ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் ஆகாதும்மா…
ஆகாதுங்கிறீங்களா எனக்குப் புரியலை சார்.
ஆர்டரை கொடுக்குற அன்னிக்கு வாங்க… நான் உங்ககிட்ட நேர்ல பேசறேன்…
சரிங்க சார்.

 

இரண்டாவது ஆடியோ
ஹலோ
சார் வேல்முருகனுங்களா…
ஆம் சொல்லுங்க சார்…
நான் ஈரோட்டுல இருந்து பேசறேங்க… ஏ.ஈ. எக்ஸாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எழுதுனீங்கல்ல… அப்பாய்ண்ட்மெண்ட் விஷயமா நாங்க ஒரு ரேட் பிக்ஸ் பண்ணிருக்கிறோம். அதனால அதை எப்படிங்கிறத சொன்னீங்கன்னா ஒன் வீக்ல ஆர்டர் கொடுத்துடுவாங்க.
ஆக்சுவலி நாங்க ஒண்ணும் அவ்ளோ பெரிய பேமிலியெல்லாம் இல்லை சார். எவ்ளோ சார்.
பதினைஞ்சு ரூவா சார்…
அந்தளவு நாங்க பெரிய பேமிலியெல்லாம் இல்லை சார்…
நீங்க பத்து ரூபா அமெளண்ட் கொடுத்துட்டீங்கன்னா ஆர்டர் கொடுத்துடுவாங்க…
ஆக்சுவலி நாங்க ரொம்ப புவர் பேமிலிதான் சார்… எங்க சொத்தைப் புல்லா கூட்டினாகூட அவ்வளவு வராது சார்…
என்னது 
எங்க சொத்தை புல்லா சேர்த்தா கூட அவ்வளவு வராது சார்… நாங்க இருக்கிறது வாடகை வீடுதான் சார்.. அப்பா பண்றது நெசவுதான் சார், அங்க ரெஸ்யூம்லகூட இருக்கும்சார் பார்த்துக்கங்க…
வாய்ப்பு இல்லை அப்ப
ஓ.கே. சார்… ஸாரி சார்… தாங்க்யூ சார்…

 

மூன்றாவது ஆடியோ
ஹலோ
ஹலோ கெளதமா…
ஹலோ உங்க பேர்…
ஏம்மா நான் ஈரோட்டுல இருந்து பேசுறேம்மா… மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். நீங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துல இருந்து அஸிஸ்டென்ட் எக்ஸாம் எழுதியிருக்கீங்கம்மா… உங்க அப்பாய்மெண்ட் விஷயமா உங்ககிட்ட பேசவேண்டியிருக்கு…
சொல்லுங்க சார்…
இல்லை… இன்னும் ஒன் வீக்குல அப்பாய்மெண்ட் ஆர்டர் கொடுத்துடறோம் நாங்க.
சரி…
உங்களுக்கு ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி வெச்சிருக்காங்க ஆபிஸிலிருந்து…
சார் உங்க நேம்…
ஆபிஸிலிருந்துனு வச்சுக்கங்க… மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், ஈரோடு.
இதுக்குவந்து ஆறு ரூபா பைனல் பண்ணி வெச்சிருக்காங்கம்மா…
ஓ.கே. சார்…
சரின்னு சொன்னீங்கன்னா… நீங்க எங்க வரணும்னு சொல்லி, அமைச்சர்கிட்டே கொடுக்கச் சொல்லிருவோம்.
இல்லை சார் இதையெப்படி சார் கலெக்ட் பண்ணீங்க… முன்னாடி மெரிட்லனுதான சொன்னாங்க…
மெரிட்ல இரண்டு பேர் வந்துட்டா, ஒருத்தருக்குத்தாம்மா கொடுக்கமுடியும்.
புரியலைங்க சார்… யார் ரெண்டு பேர்.
இன்னொருத்தர் இருக்காங்க… அதனாலதான் உங்களுக்கு ஒரு வாய்ப்பிருக்குனு சொல்லி கேட்குறோம்.
இல்லீங்க சார் எனக்கு ஒருமாதிரி இருக்கு…
சரிங்க… சரிங்க… 
இல்லீங்க சார்… இது ரொம்ப காம்படிஷன் இருக்குங்கிறீங்களா…
காம்படிஷன் இருக்கப்போய்தான் உங்களைக் கூப்பிடுறோம். வாய்ப்பு இருந்தா சொல்லுங்க பண்ணிக்கலாம்… இல்லைன்னா ஆண்டவன் எப்படி விடுறானோ அப்படிப் பண்ணிக்கிடலாம்.
இப்பம் எனக்கும், இன்னொருத்தர் யாருக்கும் சார் போட்டி…
ஏம்மா… அதைச் சொல்லக்கூடாதுல்லம்மா…
இல்லை ரிட்டர்ன் எக்ஸாமுக்கும் மார்க்… கொஞ்சம் நல்லாதான் வாங்கியிருக்கேன்.
எல்லாமே முடிஞ்சது… இன்னும் ஒரு வாரத்துல ஆர்டர் கொடுக்க நாங்க ரெடி… அதுக்கப்புறம் பிராப்ளம்…
ஓ… அதனாலதான் இப்ப கால் பண்ணீங்களா…
அதனால்தாம்மா போன் பண்ணினேன்…
சரிங்க நான் வீட்டுல டிஸ்கஸ் பண்ணிட்டுச் சொல்றேன்…
சொல்லுங்கம்மா… சொல்லுங்கம்மா…

 

நான்காவது ஆடியோ
ஹலோ…
ஜெபா…
ஆம் சொல்லுங்க சார்…
நீங்க அதான் மேடம் ஈரோடு வர்றீங்களா… இல்லை சென்னை வர்றீங்களா மேடம்…
சார் இப்ப வந்து உடனே அமெளண்டெல்லாம் ரெடி பண்ணமுடியாது சார். பேமிலி பேக்ரவுண்ட் ரொம்ப புவர். அதனாலதான் சொல்றேன். உங்ககிட்ட உண்மையைச் சொல்றதுக்கென்ன… உடனே ரெடிபண்றதுன்னா வழியில்லை…
இல்லைம்மா நான் என்ன சொல்றேன்னா…ஒரு பாதி அமெளண்ட் கொடுத்துட்டா… அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வியாழன் வெள்ளில கொடுத்துடுவாங்க. அப்புறம் ஜாயிண்ட் பண்ணிட்டுக்கூட நீங்க கொடுத்துக்கலாம். கிறிஸ்டின்ங்கிறதாலதான் இவ்வளவும் சொல்றேன்.
கரெக்ட்தான். எல்லாம் யோசிச்சுப் பார்த்தா சொல்றதெல்லாம் சரிதான். என்ன செய்ய இப்பம் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. அப்பா கொத்தனார் வேலைதான் பார்க்குறார். உடம்பு சரியில்லாம போனதால கொஞ்சம் செலவு பண்ணிட்டோம். அதனால அமெளண்டுக்கு யோசிக்கவேண்டியதா இருக்கு.
நாங்க உங்களை எதிர்பார்க்குறோம். வேண்டாம்கிறீங்களா…
ஆர்டர் வாங்கின பின்னால எவ்வளவு கேட்டாலும் நம்ம பேமிலியை நம்பி எவ்வளவுவேணாலும் தருவாங்க. அதுக்குமுன்னால கேட்குறது கஷ்டம்ல சார்.
அப்ப ஆர்டர் வாங்குனா தந்துடுவீங்களா…
ஆமாம் சார்… அப்புறம் எப்படியாவது
இப்ப என் பேர் ஜான் அம்மா… சி.எஸ்.ஐ.ல கோயம்புத்தூர் டயஸீஸ்ல எக்ஸிக்யூடிவ் கமிட்டி மெம்பர். அங்க போய் சி.எஸ்.ஐ. ரெவரண்ட்பிடிச்சு என்கிட்ட பேசச் சொல்லலாம்.
ஓ.கே.சார்
அமைச்சர் நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடுதான். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தோட அமைச்சர் கவுந்தப்பாடிதாம்மா…
நீங்க சொன்னீங்கள்ல… நேத்து
இங்க பாரும்மா… நம்ம சர்ச் மெம்பர்ம்மா நான். ஐந்து லட்சம் ரூபா கொடுத்திருக்கேன். ரெண்டே கால் கோடில சர்ச்சே கட்டிருக்கோம் அமைச்சர் தொகுதியில. அதனாலதான் இவ்வளவும் சொல்றேன்.
இதையெல்லாம் நேத்து நீங்க சொன்னீங்க…
இல்லைன்னா ஒண்ணு பண்ணுங்க. திங்கட்கிழமை நீங்க வாங்க நான் அமைச்சர்கிட்ட சொல்லிடுறேன். ஐயா இப்படி இருக்கு. நமக்கு ரொம்ப வேண்டப்பட்டியவங்கதான். ஜாய்ண்ட் பண்ணிட்டு ஒன் வீக்குல தர்றீங்கனு சொல்லிடுறேன். ஜாமீன் சொல்லிடுறேன் வாங்க.
ஓ.கே.
அதுல ஒண்ணும் பிரச்சனையில்லையே உங்களுக்கு
இல்லை
என் பர்சனல் நம்பர் எழுதிக்கிறீங்களா
9443948646 கே.ஆர்.ஜான். நான் கிறிஸ்டின் காட்டிதான் இவ்வளவுதூரம் அட்வைஸ் பண்றேன்.
ஐயா அமெளண்ட்… என்னைப் பொறுத்தவரையில… என் வீட்டைப் பொறுத்தவரையில ரொம்பவே அதிகம். அதனால்தான்.
இல்லைம்மா… முதலமைச்சர் வீடு பக்கத்துல அமைச்சர் கருப்பணன் வீடுனு கேட்டா வந்துடலாம்.
நம்மள அலெவ் பண்ணுவாங்களா…
அலெவ் பண்ணுவாங்க. என் நம்பர் இருக்குல்ல. நான் அமைச்சரைப் பாத்து சொல்லி பண்ணிக் கொடுக்கிறோம். நீங்க ஒரு டோக்கன் மாதிரி கொண்டுவந்து அமைச்சர் கையிலே கொடுத்துடுங்க. ஐயா ஜாய்ண்ட் பண்ணிட்டு மிச்சத்தை பத்துநாள்ல கொடுக்கிறேன்னு சொல்லுங்க. வேலை கிடைக்கிறது கஷ்டம் நீங்க நினைக்கிறது மாதிரி இல்லம்மா….
கஷ்டம்தான்
இவ்வளவுதூரம் அட்வைஸ் பண்றேன்னா… கிறிஸ்டிங்கிறதால்தான்.
ஹலோ…
ஆம் சொல்லுங்க சார்…
நீங்க திங்கட்கிழமை வர்றீங்களா… செவ்வாய்க்கிழமை வர்றீங்களா…
அப்பாவுக்கு மெடிக்கல் இதுக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்ட இருக்காங்க.
சொல்றதைக் கேளுங்கம்மா… திங்கள் செவ்வாயில வந்துடுங்கம்மா. என்னைக்கு ஆர்டர் கொடுப்பாங்கன்னு அமைச்சரே சொல்லிடுவார்மா. அப்புறம் ரெண்டாவது எந்தப் ப்ளேஸ்ங்கிறதையும் சொல்லிடுங்க. நீங்க கன்னியாகுமரியில எழுதியிருக்கீங்க… ஈரோட்டுலயோ, தர்மபுரியிலேயோ, போட்டுட்டா ரெண்டு வருஷத்துக்கு மாத்தமுடியாது. அதுலயும் உங்களுக்குக் கொஞ்சம் சிக்கல் இருக்காது. ஏதாவது உங்களுக்குச் சந்தேகம்னா… இன்னொரு நம்பர் கொடுத்தேன்லங்க, அந்த நம்பருக்கு கால்பண்ணிடுங்க.
ஆம்…
சாருக்கு ஈரோடுதானா
அமைச்சர் ஈரோடுதாம்மா.
உங்களுக்கு
அம்மா… நான் அமைச்சர் வீட்டுக்குப் பின்னாடி வீடுதாம்மா என்னோடது. அ.தி.மு.க.வுல தொழிற்சங்க மாவட்டச் செயலாளரா இருக்கேன். அதனாலதான் சொல்றேன்.
நீங்க நேர்லயே வாங்க… அமைச்சர்கிட்ட உங்களால முடிஞ்சதுனு ஒண்ணோ… ரெண்டோ கொடுத்துடுங்க… மிச்சத்தை பத்துப் பதினைஞ்சு நாள்ல கொடுத்துடறேன் ஐயான்னு சொல்லிடுங்க. ரெண்டாவது உங்களுக்கு எந்த ப்ளேஸ் வேணும்கிறதையும் சொல்லணும். நான் பொறுப்பு ஏத்துக்கிறேன். ரெண்டாவது எந்த ப்ளேஸ் வேணுங்கிறதையும் சொல்லணும். ஊட்டி போட்டாங்கன்னா பொண்ணைக் கூட்டிட்டு எப்படி வருவீங்க. அதெல்லாம் யோசனை பண்ணனுமும்மா நீங்க. ஓப்பனா பேசறேன் நான். என் பர்சனல் நம்பரும் கொடுத்திருக்கேன் நீங்க வாங்க. எங்க சர்ச்சுக்கே வாங்க. கவுந்தம்பாடி வந்து சி.எஸ்.ஐ. சர்ச்சுனு கேட்டாலே சொல்லிடுவாங்க. அமைச்சர் வீட்டுல இருந்து வாக்கபிள் டிஸ்டண்ட்லதான் சர்ச் இருக்கு. சர்ச் பக்கத்துல என் வீடும் இருக்குது. சரிங்களா…
ஆம்.

 

 

 

சார்ந்த செய்திகள்