Skip to main content

வாக்கிங், புனிதநீராடல், யாகம், பூஜை, விருந்து - டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின்  டைம் டூ டைம் குற்றாலம் அப்டேட்

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
ttv2

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில் அணி தாவலாம் என்ற கருத்து நிலவியதால்,   அவர்களை  பாதுகாக்கும் பொருட்டு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

ttv6

 

குற்றாலத்திற்கு இன்று அதிகாலை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேர் வந்தனர்.   அவர்கள் பழைய குற்றாலம் சாலையில் உள்ள இசக்கி ரிசார்ட்டில் தங்கினர்.   காலையில் வாக்கிங் போய்விட்டு பின்னர் 9 மணி அளவில் பாபநாசம் தீர்த்தத்தில் புனித நீராட சென்றனர்.  11 மணி அளவில் அங்கு புனித நீராடியவர்கள் இன்று புஸ்கரத்தின் இறுதி நாள் என்பதால் பாபநாசம் ஆலயத்தில் நடந்த யாகத்தில் கலந்துகொண்டனர்.   இவர்களோடு 2 எம்.எல்.ஏக்கள் வராமல் ரிசார்ட்டிலேயே தங்கிவிட்டனர்.

 

ttv9ttv10ttv11

 

  பின்னர் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 எம்.எல்.ஏக்களூம் பாபநாசம் சிவன் ஆலயத்தில் வழிபட்டு சென்றனர்.     அதன் பிறகு,  மலை மீதுள்ள அகஸ்தியர் அருவியை பார்த்துவிட்டு பின்னர் கீழே இறங்கினர்.   அதையடுத்து அவர்கள் 7 பேரும் அத்தால நல்லூர் ஆலய பூஜையில் கலந்துவிட்டு,   குற்றாலத்திற்கு திரும்பினர்.   அங்கே மதிய உணவை முடித்துவிட்டு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள இசக்கி ரிசார்ட்டின் மற்றொரு குடிலுக்கு சென்றனர்.   பின்னர் அவர்களை தொடர்ந்து 7 எம்.எல்.ஏக்களும் அதே ரிசார்ட்டிற்கு திரும்பினர்.

 

ttv

 

அதன்  பின்னர் நம்மிடம் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன்,  18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும்.    தீர்ப்பு வந்த பின்னர் எங்களின் சித்து விளையாட்டை பாருங்கள் என்று சொல்லிவிட்டு,  ரிசாட்டின் உள்ளே சென்றார். பின்னர்,  அவர்களை பார்ப்பதற்காக அமமுகவின் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம்,  தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜாவின் மருமகனான பரமசிவ ஐய்யப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளே சென்று, தங்க,. தமிழ்ச்செல்வனுக்கு சால்வை அணிவித்தனர்.   இந்த எம்.எல்.ஏக்களுக்கான தங்குமிடம், ஏற்பாடுகள் , உணவு வசதியினை நெல்லையின் முன்னாள் துணை மேயரும் கட்சியின் நிர்வாகியுமான கணேசன் கவனித்துக்கொண்டார்.    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா, செந்தில்பாலாஜி இரு எம்.எல்.ஏக்களூம் ரிசாட்டிற்கு வந்தனர்.    இதையடுத்து நெல்லை புறநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் முத்தையாவும்,  உடன் நிர்வாகிகளூம் வந்தனர்.    அவர்களுடன் ரிலாக்ஸாக பேசிய தமிழ்ச்செல்வன்,   ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.  சுந்தர்ராஜ்,  சுப்பிரமணியன்,   மாரியப்பன் போன்ற எம்.எல்.ஏக்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

 

ttv


அதன் பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் மாலை 5.30 மணி அளவில் சிறப்பு அருவியில் குளிப்பதற்காக அவர் மட்டும் சென்றார்.   அவருடன் முன்னாள் துணை மேயர் கணேசனும் சென்றார்.   தொடர்ந்து வெளியே வந்த எம்.எல்.ஏ. முத்தையாவிடம் நாம் பேசியபோது,  சிறிது நேரத்திற்கு முன்புதான் நாங்கள் வந்தோம்.   இன்று மகா புஸ்கரம் நிறைவு என்பதால் நான் பாபநாசம் ஆற்றில் நீராடச்செல்கிறேன்.   இன்று இரவு அல்லது காலையில் மற்ற எம்.எல்.ஏக்களூம் வருவார்கள்.   ஐயப்பன் சன்னிதானத்தில் 18ம் படி போல் நாங்கள் உறுதியாக தினகரன் பின்னால் இருப்போம்.   நிச்சயம் ஆட்சி மாறும் என்று சொல்லிவிட்டு, நீராடச்சென்றார்.

 

ttv7ttv3ttv3

 

சார்ந்த செய்திகள்