போலீசாரின் கண்முன்பே தீக்குளித்த டிரைவரின் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமொழி சந்திக்கிறார்.
நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட கால்டாக்ஸி டிரைவர் மணிகண்டன் என்பவரை, சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, சென்னை - தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆபாசமாகத் திட்டி, கடுமையாகத் தாக்கினர். இதில் அவமானமடைந்த மணிகண்டன், போலீசார் கண்முன்பே தீக்குளித்து இறந்தார்.
இதுதொடர்பாக, டிராஃபிக் எஸ்.ஐ. தாமரைச்செல்வன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இறந்த மணிகண்டன்இ, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பம். இவருக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் திமுக எம்பி கனிமொழி, இவருக்கு அரசு நிவாரண நிதி வழங்குவதோடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்று டெல்லியில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு கொடுத்திருக்கிறார்.
மேலும், இம்மாதம் வரும் 24ஆம் தேதி மணிகண்டனின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்கு நெல்லை செல்கிறார் கனிமொழி. தமிழக அரசு கைவிட்ட நிலையில் அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்ய நேரில் செல்கிறார்.
-இளையர்