Skip to main content

இவங்ககிட்ட சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொன்னா கேப்பாங்களா? (படங்கள்)

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள சூழ்நிலையில் சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கியமானது, மதுபானம் வாங்க வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான். 
 

மேலே நாம் பார்க்கும் புகைப்படங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபானங்கள் வாங்க வந்தவர்கள் வரிசையில் நிற்கும் காட்சிகள். இங்கு மதுபானங்கள் வாங்க வந்தவர்கள் யாரும் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதைத்தான் எதிர்க்கட்சியினர், டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நோய்த் தொற்றுக்குக் கதவு திறந்துவிட்டதுபோல் ஆகும், டாஸ்டாக் கடைகளைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்