Skip to main content

393 கோடி, 55 நாடுகள்!!! பிரதமர் நரேந்திரமோடியின் பயண செலவு மற்றும் விவரம்...

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

 

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ஆகஸ்ட் வரை 55 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் மற்றும் அதற்கான செலவுத்தொகை 393 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

 

2014 ஜூன்  மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் அவர் பூட்டானுக்கு பயணம் செய்தார், இதுவே அவரின் முதல் பயணம். அதைத்தொடர்ந்து 2018 ஆகஸ்ட் வரை அமெரிக்கா, மியான்மர், பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர் பிரேசில் என மொத்தம் 55 நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

 

கடந்த நான்கு ஆண்டுகளில் 44 அரசுமுறை பயணங்கள் சென்றுள்ள பிரதமர் மோடி,  சில நாடுகளுக்கு இருமுறை சென்றுள்ளார் என்பதும், ஆறு பயணங்களுக்கு இந்திய விமானப்படை விமானத்தில் சென்றதால் அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றும், அந்த ஆறு ரசீது இதுவரை கிடைக்கவில்லை, எஞ்சிய பயணங்களுக்கான தொகைதான் இந்த  ரூ. 393,34,27,465  என்பது  தெரியவந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்