Skip to main content

நலமுடன் உள்ளார் நெல் ஜெயராமன்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
nel jayaraman



 

நெல் ஜெயராமன்.. இந்த பெயரை தெரியாத விவசாயிகளும் இருக்க முடியாது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தீவிர விசுவாசியாக அவரது கருத்துகளை அப்படியே பின்பற்றி வந்தவர். அதனால் தான் விவசாயிகளால் ஓரங்கட்டப்பட்டு அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் விதைகளை தேடி ஓடி சென்று சேகரித்து 169 பழைய ரகங்களை கொண்டுவந்து நெல் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி தமிழகம் கடந்தும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைதவர். 


பாரம்பரிய உணவால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்ற உயரிய நோக்கத்தில் சேகரித்து வழங்கினார். ஆனால் நோய் வரக்கூடாது என்று நினைத்தவருக்கு கொடி புற்றுநோய் சிறுநீரகத்தில் வந்தது நெல் ஜெயராமனுக்கு. கொடிய நோய் வந்த போதும் தனது பணியை செய்து கொண்டே இருந்தார்.


உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்து முழு மருத்துவச் செலவையும் நான் ஏற்கிறேன் என்று அதற்காண முன்பணத்தையும் மருத்துவமனைக்கு செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது மகன் படிப்பு செலவையும் ஏற்றார். அதன் பிறகு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்து உதவிகளும் செய்தனர். 


அரசாங்கம் காக்க வேண்டிய மனிதரை மறந்துவிட்டார்கள் என்று நக்கீரன் இணைய செய்திக்கு பிறகு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாலகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் போய் பார்த்து மருத்துவச் செலவை ஏற்பதாக சொன்னார்கள். மேலும் ரூ. 5 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார்கள். 


தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னேற்றம் அதிகமில்லை. இந்த நிலையில் தான் இன்று மாலை வதந்திகள் பரவத் தொடங்கியது. ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அருகில் இருந்து கவணித்துக் கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு அறிவித்த நிதி ரூ. 5 லட்சத்தை அமைச்சர் காமராஜ் வழங்கிச் சென்றிருக்கிறார். 


நெல் ஜெயராமன் உடல் நலத்துடன் மீண்டு வந்து மீண்டும் நெல் திருவிழா நடத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.. 

 


                

 

சார்ந்த செய்திகள்