Published on 10/07/2020 | Edited on 10/07/2020

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்குக் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் மற்றும் தங்கமணி ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியானதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.