எழும்புர் குழந்தை நல மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் பலியானதை அடுத்து, அந்த மருத்துவமனைக்கு ஆய்வு நடத்த சென்ற தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
” கடந்த ஆண்டை விட டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது. டெங்கு நோய் உறுதி செய்யப்படாதநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அச்சிறுவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நோயில் 98% பேர் குணமடைந்தாலும், 2% பேர் பாதிக்கப்படுகின்றனர்.” என்று கூறினார்.
மேலும், கொசு உற்பத்தியை தடுப்பது பெரும் சவாலாக இருக்கின்றது. பன்றிக்காய்ச்சல் பருவகால நோய் என்பதால் மக்கல் தேவையற்ற பீதி அடைய வேண்டாம். இந்த நோயை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மக்கள் எதேனும் சந்தேகம் இருந்தால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். பன்றிக்காய்ச்சலை வெகு விரைவாக கண்டறியும் எலிசா கருவிகள் அரசு மருத்துவமனிகளிலேயே இருக்கிறது. அதனால், மக்கள் தாங்களாகவே மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த நோயை ஒழிக்க நீரில் கவனம் செலுத்த வேண்டும் என்றும். கர்ப்பிணிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பெங்களூருவில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், தமிழகத்தில் இது பல இடங்களில் ஒருசிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் இது நன்கு பரவக்கூடும் என்பதால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.