தேமுதிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
பெண் தொண்டர்கள் தான் தேமுதிகவின் பலம். இரண்டு ஆண்ட கட்சிகளுக்கு இணையான கட்சி தேமுதிக. லஞ்சம் மற்றும் வசூலில் தான் எடப்பாடி ஆட்சி நடக்கிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு கட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஒரு முறை தோல்வி அடைந்து விட்டதால் கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது. நாங்கள் கலைஞர், ஜெ. நல்ல உடல்நிலை இருக்கும் போதே அவர்களை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள். தேர்தல் வந்தால் தேமுதிக யார் என நிருபிப்போம். களத்தில் உங்களை சந்திக்கிறோம்.
தினம் ஒரு கட்சிகள் முளைக்கிறது அவை எல்லாம் காணாமல் போகும். பெண்களில் ஹாசினி, லாவன்யா, உஷா என இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோம். எடுபிடி எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வழிப்பறி, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது. காவல் துறையை சேர்ந்த காமராஜ் என்பவர் அந்த துறைக்கே இழுக்கை ஏற்படுத்திருக்கிறார். காவல் துறை காவு வாங்கும் துறையாக தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது.
உஷா அவர்களை துரத்திய அந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் தலை கவசம் அணியாமல் சென்றது ஏன்? தீவிரவாதிகள், கொலை செய்தவர்கள் நடமாட அனுமதிக்கும் போது தலை கவசம் அணியாமல் போனது குற்றமா? காவல் துறையை மக்கள் ஏளனமாகப் பார்க்கிற நிலைமை இருக்கிறது. தலைகவசத்திற்கு மக்களை துன்புறுத்துகிறார்கள்.
ஒரு மாசத்துக்கு ஒரு கோடி வசூல் செய்ய டிஎஸ்பிக்களுக்கு தலை கவசத்துக்காக டார்கெட் கொடுத்த ஆட்சி எடப்பாடி கொடுத்திருக்கிறது. பெண்கள் காதலிக்க தைரியம் இருக்கும் போது அவர்களையே கரம் பிடிக்கும் போது தைரியமாக கரம் வாழ்ந்து காட்டுங்கள். ஆண்களை ஏமாற்றாதீர்கள் என கூறினார்.
விஜயகாந்த் மீண்டும் உடல் நலம் தேறி வருவார் தேர்தல் நேரத்தில் அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பாருங்கள். தேமுதிகவுக்கு காலம் கனிந்து கொண்டிருக்கிறது. எந்த லட்சியத்துக்காக கட்சி ஆரம்பித்ததோ அந்த இலக்கை அடையும் வரை பின்வாங்க மாட்டோம்.
அனைவரும் தலை கவசம் அணிய வேண்டும். ஒரு சட்டம் இயற்றினால் தொடர்ந்து அதை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என நீதி துறைக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
ஆட்சியைச் சேர்ந்தவர்களே உங்களால் முடியாது என்றால் ராஜினாமா செய்யுங்கள் . தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றி பேச எந்த தலைவருக்கும் தகுதி இல்லை என்றார். அய்யாக்கண்ணு அவர்களை பெண் அறைந்தார். செருப்பை தூக்கி காட்டினார். அவரை அடிக்கிற அதிகாரத்தை யார் கொடுத்தது. ஆண்களுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரத்தை கொடுத்தாக வேண்டும். திருச்செந்தூர் விவகாரத்தில் பெண்ணின் செயல் கண்டிக்கத் தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. எப்போது முடியும். கேப்டன் விஜயகாந்த் வந்தால் தான் முடியும் என மக்கள் கூறுகிறார்கள்.
தண்ணீர் ஏன் நாம் அண்டை மாநிலங்களிடம் கை ஏந்த வேண்டும். நாமே சேமிக்கலாமே. அந்த ஆட்சியாளர்கள் தகுதி இல்லாதவர்கள். கால்வாய் , நீர்வரும் வழியில் தூர் வார வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தரவில்லை. இரு கட்சிகளும் பொய் சொல்ல கற்றுக் கொண்டன. உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கும் வரை ஆட்சி இருக்குமா என்றே தெரியவில்லை எனத் தெரிவித்தார். வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். மோடி அவர்கள் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி என வரிகளால் வலி மிக்க மக்கள் தான் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் கேப்டன் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும்.
குட்டி கதை ஒன்றை சொல்கிறேன்.
மாபெரும் குருவிடம் ஒரு பிச்சைகாரர் பிச்சை கேட்ட போது அந்த குரு பிச்சையாக ஒரு போர்டு கொடுத்தார். அதை வைத்தே மூன்று தலைமுறையாக பிழைத்தார். மூன்றாம் தலைமுறை கடந்து மீண்டும் அதே மகானிடம் பிச்சை கேட்ட போது அந்த மகான், தான் கொடுத்த பிச்சை போர்டை திரும்ப வாங்கி கொண்டார். வாங்காதீர்கள் அந்த போர்டு ராசியானது என பிச்சை வாங்கியவர் கூறினார்.
ஆனால் மகான், நான் உன்னிடம் கொடுத்த ஓடு தங்கத்தால் செய்யப் பட்டது இருந்தும் அதை வைத்து பிழைக்க தெரியவில்லை என கூறினார். இந்த கதையில் வரும் ஓடு என்பது ஓட்டு என்கிற ஆயுதம் அது மக்களிடம் இருந்தும் ஆட்சியாளர்களிடம் மக்கள் பிச்சை எடுப்பதாக தெரிவித்தார். வரப் போகும் தேர்தலிலாவது நியாயமான, தைரியமான, மக்களுக்கான ஆட்சியை அமைக்க தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்க மாற்றத்தை கொண்டு வர கேட்டுக் கொண்டார்.