Published on 08/10/2018 | Edited on 08/10/2018
![108](http://image.nakkheeran.in/cdn/farfuture/NbStUXTjVknVueZigR-9al8Xh2HAQNYwgfQVUQU5Hjs/1539012120/sites/default/files/inline-images/108.jpg)
அவசர உதவி ஆம்புலன்ஸ் எண்ணான 108 தொழில்நுட்பக் கோளாறால் தற்காலிகமாக செயல்படவில்லை.
பி.எஸ்.என்.எல். நிறூவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 108 அவசர ஊர்தி எண் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று எண்ணாக 044-40170100 என்ற எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தற்காலிகமானதுதான் விரைவில் இது சரிசெய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவரை இந்த மாற்று எண்ணை உபயோகிக்க அறிவுரைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 108 சேவை சீராகிவிட்டது. வழக்கம்போல் உதவி தேவைப்படுவோர் 108 என்ற எண்ணையே தொடர்புகொள்ளலாம்.