



Published on 30/05/2020 | Edited on 30/05/2020
தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,372-ல் இருந்து 20,246 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 13,362. ராயபுரம் மண்டலத்தில் புதியதாக 122 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2446-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6869 பேர் குணமடைந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் அதிகமாகி வருவதால் சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தை கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையாக மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.