![tuty](http://image.nakkheeran.in/cdn/farfuture/kC1u4F1WTaP7KfRThUnSXgM3wcKLnMM5BMM9rt7aFlU/1533347684/sites/default/files/inline-images/tuty.jpg)
ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகைகுண்டுகளை வீசிய போலீசார் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடத்தினர்.
![poli](http://image.nakkheeran.in/cdn/farfuture/DAtv_BPcMLqRs7fiVktcSGn8syDkpAqGLGuiGwq5SCc/1533347636/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-05-22%20at%2011.47.55.jpeg)
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்த நிலையிலும் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதனால் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் நுழைந்த போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன.
![poli](http://image.nakkheeran.in/cdn/farfuture/U4KGvKVFDPxnb4s83bS8AkZEmqZPSObDewlRmckGgN0/1533347636/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-05-22%20at%2012.57.51.jpeg)
இந்நிலையில், தூத்துகுடியில் குறைவான போலீசாரே இருப்பதால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்ற சூழல் நீடித்து வருகிறது.