8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவாகினால்தான், நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும், விவசாயிகள் பாதிக்காத வகையில் 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
8வழிச்சாலை போன்ற பெரிய பெரிய திட்டங்கள் வரவேண்டும். வந்தால் தான் நாடு முன்னேறும். அது போன்ற திட்டங்கள் வந்தால் தான் தொழில்வளம் பெருகும். நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது சிலருக்கு கண்டிப்பாக இழப்பு இருக்கும்.
அப்படி இழப்பவர்களுக்கு, அவர்களது மனது சந்தோஷமடையும் அளவுக்கு நிலம் அல்லது பணம் கொடுத்து சமாதானம் செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு விவசாய நிலங்களை பாதிக்காத அளவிற்கு செய்தால் ரொம்ப நல்லது. 2019 தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. அதற்கு நேரம் தான் பதில் சொல்லும் என்றார்.