![](http://image.nakkheeran.in/cdn/farfuture/C79d9ApFVP1-ShRlffoNt0Tov2dIxhsOCX2ISjKUUzs/1533347676/sites/default/files/inline-images/secretariate.jpg)
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று மாலை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஏடிஜிபியான சைலேஷ்குமார் யாதவ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏடிஜிபியாக மாற்றம். தென்சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக மாற்றம்.
வடசென்னை கூடுதல் ஆணையர் ஜெயராமன் மாற்றம். வடசென்னை கூடுதல் ஆணையராக தினகரன் நியமனம். தென்சென்னை கூடுதல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். குற்ற ஆவணப்பிரிவு ஐஜி. சுமித்சரண் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. ஆக மாற்றம்.