Skip to main content

தைரியம் இருந்தா தொட்டுப்பார்... மிரட்டும் ‘வாட்ஸ் அப்’

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

சமீபமாக வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் பரவி வருகிறது, 'don't touch here' என்று. அதையும் மீறி நாம் அதைத்தொட்டால் மொபைல் ஹேங் ஆகிவிடும், வாட்ஸ் அப் செயலிழந்து மீண்டும் வரும். இது வைரஸா, தகவல் திருடப் பயன்படுகிறதா, நமது கணக்கை ஹேக் செய்வதற்காக இதை பயன்படுத்துகிறார்களா... இப்படி பல கேள்விகள் நமக்குள் இருக்கும் இந்தக் கேள்விகளெல்லாம் பதில்...

 

whats app

 

 

ஒவ்வொரு ஆப்களுக்கும் ஒரு திறன் இருக்கும், அதை மீறி நாம் பயன்படுத்தும்போதுதான் ஹேங் ஆவது போன்ற பிரச்சனைகள் தோன்றும். அதைத்தான் இதில் பயன்படுத்தியுள்ளனர். அந்த கருப்பு புள்ளிக்கும் குறிகளுக்கும் இடையே ஏகப்பட்ட வார்த்தைகளை (Encrypt) மறைத்துவைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வாட்ஸ் ஆப்பால் ஒரு நேரத்தில் 1000 வார்த்தைகளை படிக்க முடியும் என்றால் அதில் 2000, 3000 வார்த்தைகள் இருக்கும். இதனால் வாட்ஸ் ஆப் திணறி செயலிழந்துவிடுகிறது. இதனால் ஆப்பிற்கு எந்த விதமான சேதாரமும் ஆகாது. பழைய மாடல் மொபைல்களில் இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படும். மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

டெஸ்க்டாப் வெர்ஷனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும்போது இது செயல்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது...