Skip to main content

பிக் பாஸ் பிபா

Published on 06/07/2018 | Edited on 07/07/2018

தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பல திருப்பு முனைகள் கொண்ட ஆட்டமாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, தற்பொழுது உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான ‘மெஸ்ஸி, ரோனோல்டோ’ ஆகிய இரு வீரர்களின் அணிகளும் இந்த உலகக்கோப்பை போட்டியை விட்டே வெளியேறியது. மேலும் இப்படி பல திருப்புமுனைகள் கொண்ட இந்த உலகக்கோப்பையில், தற்பொழுது முதல் முறையாக ‘வி.ஏ.ஆர்’ எனப்படும் காணொளி நடுவர் என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

var


இந்த ‘வி.ஏ.ஆர்’ எனப்படும் முறை எந்த வித முடிவையும் எடுக்க முடியாது. இது போட்டியின் போது மைதானத்தில் உள்ள நடுவருக்கு வீரர்களால் செய்யப்படும் தவறுகளை காட்டும். இதனால் மைதானத்தில் உள்ள நடுவரின் தீர்ப்புக்கு வலுசேர்க்கும். என்ன இருந்தாலும் மைதானத்தில் உள்ள நடுவருக்கே இறுதி முடிவு எடுக்கும் தன்மை இருக்கும். 

 

வி.ஏ.ஆர்-இன் செயல்:

 

“வி.ஓ.ஆர்” (வீடியோ ஆபரேஷன் ரூம்) எனப்படும் இடத்தில் தான் இந்த ‘வி.ஏ.ஆர்’ முறை செயல்படுகிறது. இந்த வி.ஓஆர், மாஸ்கொ வில் உள்ள ‘இன்டர்நேஷனல் ப்ரோட்காஸ்ட் சென்டர்’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் போட்டி நடக்கும் இடத்தில் உள்ள நடுவர்களுக்கு ‘பைபர் லிங்க் ரேடியோ சிஸ்டம்’ மூலமாக தகவல் பரிமாறப்படுகிறது. 

 

மேலும் இந்த ‘வி.ஏ.ஆர்’ முறையில் ஒவ்வொரு போட்டிக்கும் ‘வி.ஏ.ஆர்’-ஆக ஒரு நடுவரும். ‘ஏ.வி.ஏ.ஆர்’-ஆக 3 நடுவர்களும் இடம்பெற்றிருப்பர். இவர்களில் ‘வி.ஏ.ஆர்.’ எனப்படும் நடுவர் திரையில் போட்டியை கவனித்து கொண்டே இருப்பார். பின் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை போக்க 4 பிரிவுகளாக இருக்கும் திரையில் வேவ்வேறு திசையிலிருந்து காண்பிக்கப்படும் காணொளி மூலம் தகவலினை மைதானத்தில் இருக்கும் நடுவருக்கு பகிர்ந்து கொள்வார்.


 
‘ஏ.வி.ஏ.ஆர்’ மூன்று விதமாக செயல் படுவார்கள். ‘ஏ.வி.ஏ.ஆர்-1’ எனப்படும் அந்த நடுவர் முக்கிய காணொளியை பார்த்துகொண்டே இருப்பார். நேரடியாக நடந்துகொண்டிருக்கும் போட்டியில் உள்ள அந்த தவறுகளை உடனே மைதானத்தில் உள்ள நடுவருக்கு தெரிவித்துவிடுவார். 
‘ஏ.வி.ஏ.ஆர்-2’ எனப்படும் இந்த இரண்டாம் நடுவர் ‘ஆப்-சைடு’ எனப்படும் அந்த தவறுகளை உடனே தெரிவித்துவிடுவார்.

 

‘ஏ.வி.ஏ.ஆர்-3’ இந்த மூன்றாம் நடுவர் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும் அந்த காட்சிகளை கவனித்து கொண்டே இருப்பார். பின் ஆட்டத்தில் நடந்த தவறுகளை அவர் ‘வி.ஏ.ஆர்’ மற்றும் ‘ஏ.வி.ஏ.ஆர்-2’ ஆகிய இரு நடுவருக்கும் தெரிவித்துவிடுவார்.

 

எப்படி இவ்வளவு துல்லியமாக பார்க்கிறார்கள்? 

 

பிக் பாஸ்-இல் உள்ளது போல இதிலும் ‘கேமரா’ மூலமாக வீரர்களின் தவறுகள் கவனிக்கப்பட்டு நடுவர்கள் முடிவு எடுக்கின்றனர். மைதானத்தில் மொத்தமாக 33 கேமராக்கள் உள்ளது. இதில் 8  ‘சூப்பர் ஸ்லோ மோஷன்’ கேமராக்கள் எனப்படும் காணொளியை எந்தவித குறையின்றி மெதுவான தருணத்தை கொடுக்ககூடியதான கேமரா வைத்துள்ளனர். இது மட்டுமின்றி 4 ‘அல்ட்ரா ஸ்லோ மோஷன்’ கேமராக்கள் எனப்படும் இன்னும் காணொளியை மெதுவான தருணத்தில் இயக்க கூடியதான கேமரா வைத்துள்ளனர். 


 
இத்தகைய கேமராக்கள் மூலமாக ‘வி.ஏ.ஆர்.’ முறை செயல்படுகிறது. மேலும் இது மட்டுமின்றி 2 ‘ஆப்-சைடு’ கேமரா கூட இவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் ‘மீடியா ரைட் லிசென்செஸ்’ எனப்படும் லைசென்ஸ் பெற்ற தொலைக்காட்சி கேமராக்கள் கூட இவர்களால் உபயோகம் செய்யப்படுகிறது. 

 

‘ஹெலிகாப்ட்டர்-கேமரா’ எனப்படும் கேமரா, மேலிருந்து கீழ் பார்த்தபடி ஆட்டத்தை காண்பிக்கும். இந்த கேமரா உட்பட சில கேமராக்கள் இந்த ‘வி.ஏ.ஆர்.’-இல் உபயோக படுத்தமுடியாது. 
 

var


என்னென்ன முடிவுகளை ‘வி.ஏ.ஆர்.’ பரிந்துரைக்கும்?

 

இந்த ‘வி.ஏ.ஆர்.’ முறையில் நான்கு விதமான விதிமீறல்கள் மற்றும் தவறுகளை இது சுட்டிக்காட்டும். மேலும் முடிவுகளை பரிந்துரைக்கும்.

 

 
•    கோல் அடிக்கும் பொழுது ஏற்படும் தவறுகள் மற்றும் கோல் கம்பம் அருகில் நடைபெறும் தவறுகள்.(இதில் ஆப்-சைடு எனப்படும் இந்த வித தவறுகளை குறித்து சொல்லும்)


•    நடுவர் கொடுத்த பெனால்டி-யை தவறென முறையிடுவது மற்றும் டி-ஏரியாவில் நடந்த தவறுக்கு பெனால்டி தராமல் நடுவர் இருந்தால் அதற்கு முறையிடுவது.


•    நேரடியாக சிகப்பு அட்டை நடுவர் காண்பித்தால் அதனை எதிர்த்து ‘வி.ஏ.ஆர்.’-ஐ பார்க்க பரிந்துரை செய்வது.


•    தவறாக மஞ்சள் அட்டை அல்லது ஏதேனும் நடுவர் கூறினால் அதற்கு ‘வி.ஏ.ஆர்.’-ஐ பார்க்க கூறுவது.

 

இந்த நான்கும் போட்டியின் பொழுது சம்பவம் நடக்கும் பொழுதே நடுவரிடம் பரிந்துரைத்து கேட்க வேண்டும் இல்லையெனில் போட்டி தொடர்ந்து நடைபெறும். மேலும் இத்தனை கூறினாலும் மைதானத்தில் உள்ள நடுவரே இறுதி முடிவு கூறுவார்.

 

மேலும் இந்த ‘வி.ஏ.ஆர்.’ முறைக்கு முறையிட முதலில் நடுவர் ‘காதுகளின் அருகில் கை எடுத்து செல்வார்’. அப்படி என்றால் ‘வி.ஏ.ஆர்’ நடுவருக்கு இந்த தவறை குறித்து கேட்டுள்ளேன் என்று அர்த்தம். மேலும் ‘செவ்வகம்’ (rectangle) வடிவில் அவர் கையசைவில் செய்தால் மட்டுமே அது ‘வி.ஏ.ஆர்.’-க்கு முறையாக சென்றுள்ளது என்று அர்த்தம். 

 
‘ஆர்.ஆர்.ஏ’ என்றால் என்ன?

 

ஆர்.ஆர்.ஏ எனப்படுவது ‘ரெப்ரீ ரெவ்யூ எரியா’ என்பதாகும். இந்த இடம் மைதானத்தில் வீரர்கள் நுழயக்கூடிய இடத்தில் ஒரு சின்ன கதவு இல்லா பெட்டகம் போன்ற அமைப்பில் சின்ன திரை கொண்டிருக்கும். அந்த திரையில் மைதனாத்தில் உள்ள நடுவர் தனது சந்தேக தருணங்களை அந்த இடத்திற்கு சென்று கவனித்து முடிவு கூறுவார். 

 

‘வி.ஏ.ஆர்., ஆர்.ஆர்.ஏ’ இந்த இரு முறைகள் நடைபெறும் தருணத்தில் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். பின்பு முடிவு கூறிய பின் போட்டி நடைபெறும்.

 

இந்த முறைகள் பின்பற்றும் பொழுது அது மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அங்கு இடம்பெற்றுள்ள ‘பெரிய திரையில் அறிவிக்கப்படும்’. 
 

virtual


வேறென்ன சிறப்பம்சம்?

 

இந்த ‘வி.ஏ.ஆர்.’ முறையில் ‘விர்சுவல் ஆப்-சைடு லைன்’ எனப்படும் ஆப்-சைடு கண்டுபிடிக்க பயன்பெறும் வகையில் மென்பொருள் மூலமாக ஆப்-சைடு தவறுகள் கண்டுபிடிக்கப்டுகிறது. 

 

இதில் ‘ஆட்டத்தை வெவ்வேறு கோணங்கள், லென்ஸ் டிஸ்டார்ஷன், பீல்ட் கிர்வேசிவ்’ போன்ற பல வியூகங்களை வைத்து மென்பொருள் மூலமாக செயல்வடிவம் பெற்றுள்ளது.


மேலும் இந்த ‘வி.ஏ.ஆர்’ முறைக்கு திட்ட தலைவராக முன்னால் பிபா கால்பந்தாட்ட நடுவர்களில் ஒருவரான ‘ராபர்டோ ரோசெட்டி’ என்பவரை பிபா சம்மேளம் அறிவித்தது. 13 நடுவர்கள் பிபா சம்மேளம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களும் ‘வி.ஏ.ஆர்.’ முறையில் நடுவர்களாக இருப்பார்கள். மொத்தமாக ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ‘வி.ஏ.ஆர்.’ முறையில் 4 நடுவர்கள் இடம்பெறுவர்.

 


இந்த ‘வி.ஏ.ஆர்.’ 2012-13 ‘எரிடிவிஸ் கோப்பை’ போட்டியில் முதன்முதலாக சோதனை செய்யப்பட்டது. முதன்முதலில் ஆஸ்திரேலியா உள்நாட்டு கால்பந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் ‘ஏ-லீக்’-இல், ஏப்ரல் 7 2௦17-ல் மெல்பர்ன் சிட்டி எப்.சி அணிக்கும் அடிலைட் யுனைடெட் அணிக்கும் நடந்த போட்டியில் அதிகாரபூர்வமாக வி.ஏ.ஆர். இடம்பெற்றது. பின் இது 2017-ல் நடந்த பிபா கான்பெடெரேஷன் கோப்பையில் இடம்பெற்றது. இந்த ‘வி.ஏ.ஆர்’ முறையை மார்ச் 3 2018-ல் கால்பந்தாட்ட சட்டத்தில் நிரந்தர தன்மை வாய்ந்ததாக அமைத்தனர். பின் இந்த ‘வி.ஏ.ஆர்.’ பிபா கால்பந்து உலககோப்பையில் பயன்படுத்தப்படும் என்று மார்ச் மாதம் 16ஆம் தேதி அன்று  அறிவிக்கப்பட்டது.
 

Next Story

10 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்தப்பட்ட ரொனால்டோ, மெஸ்ஸி...

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

bal

 

கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பலோன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த விருதை கடந்த 2008 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவருமே மாற்றி மாற்றி பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு குரோஷிய அணி வீரர் லூக்கா மோட்ரிக் இந்த விருதினை பெற்றுள்ளார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டார் இவர். விருது பெற்ற பின் பேசிய இவர், விருதை பெற காரணமாக இருந்த பயிற்சியாளர், அணி நிர்வாகம் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.  பெண்கள் பிரிவிற்கான இந்த விருதை 23 வயது நிரம்பிய நார்வே வீராங்கனை அடா ஹெகெர்பேர்க் பெற்றார்.

 

 

Next Story

பிஃபா சிறந்த வீரராக குரோஷியாவின் கேப்டன்!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
Luka

 

 

 

2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பிஃபா விருதினை, குரோஷியா நாட்டின் கேப்டன் லூக்கா மேட்ரிக் பெற்றுள்ளார். இவர் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ மற்றும் எகிப்தின் முகமது சாலாவை பின்னுக்குத் தள்ளி இந்த விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

லூக்கா மேட்ரிக் குரோஷியா அணியின் கேப்டனாக, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின்போது தேர்வு செய்யப்பட்டார். மேலும், வரலாற்றில் முதன்முறையாக மிகச்சிறிய அணியான குரோஷியா, இவர் தலைமையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தொடரின் முடிவில் லூக்காவுக்கு தங்க கால்பந்து விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் பிஃபா சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் யூ.இ.எஃப்.ஏ. லூக்காவுக்கு சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

இந்த விருதுக்கான போட்டியில் உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் முகமது சாலா ஆகியோர் இருந்தனர். லூக்காவும், ரொனால்டோவும் ரியல் மேட்ரிட் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். 
 

அதேபோல், பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் திதியெர் தேஸ்காம்ஸுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும், பெல்ஜியம் கோல்கீப்பர் திபாவுட் கோர்டாஸுக்கு சிறந்த கோல்கீப்பர் விருதும் வழங்கவுள்ளதாக பிஃபா அறிவித்துள்ளது.