டி.சி.அரவிந்துக்கும் கருணாஸுக்கும் என்னதான் பிரச்சனை. ஏன் அவரை மட்டும் குறிவைத்து தாக்கிப் பேசினார் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி யின் அவைத்தலைவர் நெடுமாறனிடம் கேட்டோம். “""இந்த அரவிந்த் 2016-ல் 6 மாதங்கள் விருதுநகர் எஸ்.பி.யா இருந்தாரு. அப்போது அடிக்கடி எங்க சமூகத்தை குறிவச்சு கேஸ்கள் போட்டுக் கிட்டே இருப்பாரு. இன் னொரு தரப்புக்கு அவர் ஆதரவா பண்ணிய காரியங் களால் பெரிய சாதிக் கலவரமே ஏற்படும் அபாயம்... ஒரு வழியா அங்கிருந்து டிரான்ஸ்பராகி சென்னைக்கு வந்தாரு.
நாலஞ்சு மாசத்துக்கு முன்னால வளசரவாக்கம் ஏரியாவுல முஸ்லிம் பிரமுகர் ஒருத்தரைக் கடத்தினர். அவர்கள் கடத்திய வாகனத்தில் "தேவர் வாழ்க'ன்னு இருந்ததை வச்சு, எங்க கட்சியின் பொதுச் செயலாளர் தாமோதர கிருஷ்ணனிடம் பேசினார் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆல்வின் ராஜ். கடத்தல் கோஷ்டி கடலூரில் இருப்பதை டிரேஸ் பண்ணி, அவர்களை சரணடைய வைப்பதற்காக சென்னைக்கு வரவழைத்தார் பொதுச்செயலாளர்.
செல்போன் டவரை அடையாளம் வச்சுக்கிட்டு, தாமோதர கிருஷ்ணன் வீட்டுக்கு போலீஸ் படையுடன் வந்தார் டி.சி.அரவிந்த். கடத்தலுக்கு காரணமே தாமோதர கிருஷ்ணன் தான் என்று முடிவு பண்ணி எக்குத்தப்பா பேசினார். அதுக்கப்புறம் போரூர்ல ஒரு இடப் பிரச்சனையில், தாமோதர கிருஷ்ணன் மேல புகார் கொடுக்க வைத்தார். ஆனால் அந்த புகார்தாரர் கோர்ட்ல வந்து உண்மையச் சொல்லிட்டாரு.
இதனால் கடுப்பான அரவிந்த், தாமோதர கிருஷ்ணனை படுமோசமான வார்த்தைகளால் அர்ச்சித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதை பிரிண்ட் எடுத்து கமிஷனரிடமும் டி.ஜி.பி.யிட மும் கம்ப்ளைண்ட் பண்ணினோம். அதுக்குப் பிறகும் தொடர்ந்து எங்க கட்சிக் காரர்களை குறிவைக்க ஆரம்பித்தார்'' என்கிறார். போலீஸ் தரப்பிலோ டி.சி. அரவிந்த், சட்டப்படி செயல்பட்ட தைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வளசரவாக்கம் பகுதியில் கருணாஸ் ஆட்கள் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கூறியும் விடவில்லை, மேலும் பல பிரச்சனைகளை அவர்களே கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்த்தனர். இதனால் கோபமடைந்த காவல்துறையினர் அவர்களை கண்டித்தனர். இதைத்தொடர்ந்துதான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அங்கு பேசிய கருணாஸ் காவல்துறையை ஏக வசனத்தில் வசைபாடினர். இதைத்தொடர்ந்துதான் அவர் கைது செய்யப்பட்டார்.