Skip to main content

விநாயகர் சிலை வைப்பவர்களா நீங்கள், இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
vinayagar sathurti

 

 

நாளை விநாயகர் சதுர்த்தி, ஊரின் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை வைக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இவை. இவற்றை பின்பற்றியே விநாயகர் சிலைகள் அமைக்கப்படவேண்டுமென அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

  • சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் ரசாயன கலவைகளால் செய்த சிலைகளைத் தவிர்க்க வேண்டும். சிலை உயரம் பீடத்துடன் சேர்த்து 10 அடிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 
     
  • நகராட்சி,  காவல், தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் முன்னதாகவே அனுமதி பெறவேண்டும்.
     
  • தனியார் இடமாக இருந்தால் அந்த இடத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறவேண்டும். பொது இடமாக இருந்தால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து அனுமதி கடிதம் பெற்று, அதை காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
     
  • பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகிலோ, போக்குவரத்திற்கு இடையூறாகவோ, மருத்துவமனை, கல்வி நிலையம் ஆகியவற்றின் அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. 
     
  • பிற மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கோஷங்கள், பாடல்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. 
     
  • அனுமதியின்றி மின்சாரம் எடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது சட்டவிரோத செயலாகும்.
     
  • தற்காலிக பந்தல் அமைக்க பயன்படும் பொருட்கள், எளிதில் தீ பற்றக்கூடியவையாக இருத்தல் கூடாது. அப்படி பந்தல்களில் மின் உபகரணங்கள் இருப்பின் அவை தீயணைப்பு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறவேண்டும். 
     
  • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலை வைக்கும் இடத்திற்கு அருகிலோ, உள்ளேயோ வைக்கக்கூடாது.  தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவேண்டும்.
     
  • ஒலிப்பெருக்கி ஒலியின் அளவை எக்காரணம்கொண்டும் வரையறுக்கப்பட்ட அளவை மீறக்கூடாது. இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஒலி பெருக்கிகளையோ, வெடிகளையோ பயன்படுத்தக்கூடாது.

     
  • காவல்துறையால் வகுக்கப்பட்ட பாதையில் மட்டுமே சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடத்தப்படவேண்டும், அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவேண்டும்.

     
  • சிலை அமைப்பவர்களின் சார்பில் எப்போதும் சுழற்சி முறையில் ஐந்து பாதுகாவலர்கள் நியமிக்கபட வேண்டும்.

     
  • சமூக உணர்வுகளையும், அமைதியையும் பேணிக்காப்பது நமது கடமை, அவற்றிற்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.