Published on 25/09/2018 | Edited on 25/09/2018
ஆண்ட்ராய்ட் இன்றைய நவீன உலகின் தவிர்க்கமுடியாத ஒன்று. ஒன்றுக்கும் உதவாது, தோல்வியடைந்துவிடும் என பத்து ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்டது. ஆனால் இன்று ஆண்ட்ராய்ட் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
இன்றுடன் ஆண்ட்ராய்ட் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்ட்ராய்ட் பற்றிய சில குறிப்புகள்
- ஆண்ட்ராய்டை பலர் கூகுள் நிறுவனம் தயாரித்ததாக நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் 2005ல் ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கினர்.
- பயன்பாட்டிலுள்ள மொபைல்களில் 88 சதவீத மொபைல் ஃபோன்கள் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஐ சார்ந்தவை.
- ஆண்ட்ராய்ட் உண்மையில் டிஜிட்டல் கேமிராக்களுக்கான ஓ.எஸ். ஆகதான் தயாரிக்கப்பட்டது.
- லினக்ஸ் என்ற ஓ.எஸ். ஐ அடிப்படையாக வைத்துதான் ஆண்ட்ராய்ட் உருவானது.
- முதல் ஐந்து ஓ.எஸ்.கள் பிளாக்பெர்ரி போன்று இருக்கும்.
- முதன்முதலில் ஹெச்.டி.சி (HTC) ஜி1 மொபைலில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஆண்ட்ராய்டின் அடையாளமான பச்சை பொம்மையின் பெயர் பக்டிராய்ட்
- 2 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயன்பாட்டாளர்கள் ஆண்ட்ராய்டை பயன்படுத்துகின்றனர்.
- ஆண்ட்ராய்ட் 1.0 (குறிப்பிட்ட பெயர் இல்லை) 23.09.2008
- 1.1 பெடிட்ஃபோர் 09.02.2009
- 1.5 கப்கேக் 27.04.2009
- 1.6 டோனட் 15.09.2009
- 2.0 - 2.1 எக்லைர் 26.10.2009
- 2.2 ஃப்ரோயோ 20.05.2010
- 2.3 - 2.3.7 ஜிஞ்சர் பிரட் 06.12.2010
- 3.0 - 3.2.6 ஹனிகாம்ப் 22.02.2011
- 4.0 - 4.0.4. ஐஸ்க்ரீம் சேண்ட்விச் 18.10.2011
- 4.1-4.3.1 ஜெல்லிபீன் 09.07.2011
- 4.4-4.4.4 கிட்கேட் 31.10.2013
- 5.0-5.1.1 லாலிபாப் 12.11.2014
- 6.0-6.0.1 மார்ஸ்மல்லோ 05.10.2015
- 7.0-7.1 நோகட் 22.08.2016
- 8.0-8.1 ஓரியோ 02.08.2017
- 9.0 பீ 06.082018
- பின்லாந்து சிறுவன் குளிராமல் இருப்பதற்காக தனது பேண்டில் சிறுநீர் கழித்தானாம் அந்தக்கதைதான் ஆண்ட்ராய்டின் கதை என்று 2010ம் ஆண்டில், அப்போதைய நோக்கியாவின் சி.இ.ஓ.வாக இருந்த அன்ஸ்ஸி வன்ஜோகி கூறினார். ஆனால் அதையெல்லாம் உடைத்து ஆண்ட்ராய்ட் வளர்ந்து நிற்கிறது.