அதிகரித்துவரும் வெப்ப நிலைக்கு, பருவநிலை மாற்றம்தான் காரணம். பருவநிலை மாற்றத்தினால், வெப்பம் மட்டுமல்ல குளிரும் அதிகரிக்கும். அதேசமயம் மழை பொழிவு காலத்திற்கு ஏற்றாற்போல் பொழியாது. ஒருபுறம் மழை குறைவு, மறுபுறம் வெயில் அதிகரிப்பு என்பது வறட்சிக்கு வித்திடும். வறட்சியால் விளைச்சல் குறைவாகும். விளைச்சல் குறைவாகும்போது அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வு வீடுதோறும், வீதிதோறும் மரங்களை நடுவது. அதனை நம்மில் எத்தனை பேர் செய்கிறோம் என்று தெரியவில்லை. ஆனால், மரம் நடுவதையே தனது வாழ்நாள் பணியாக சென்னையைச் சேர்ந்த முல்லைவனம் செய்துவருகிறார்.
முல்லைவனத்திற்கு, மரங்களின் மனிதர் (TREE MAN) எனும் புனை பெயரும் உண்டு. சென்னையில் 400 சதுர அடி அளவே உள்ள வீட்டில் தனது வயது முதிர்ந்த அம்மா, தனது, மகள் மற்றும் மகனுடன் வசித்துவருகிறார். இவர் தனது வாழ்நாளில் 50 இலட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளை இந்தியா முழுக்க நட்டுவுள்ளார். இதற்காக மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இவரின் சேவையை பாராட்டி அவரை இன்னும் உற்சாகம் படுத்தும் விதமாகவும், அவரின் சேவையை அங்கிகரிக்கும் விதமாகவும் அவருக்கு சின்ன யானை எனப்படும் (TATA ACE) மற்றும் தங்க மெடல் இரண்டையும் கொடுத்தார். அவர் கொடுத்த வாகனத்தை வைத்து இதுவரையிலும் கிட்டத்தட்ட 1 கோடி மரக் கன்றுகளுக்கு மேலாக நட்டுவருகிறார்.
சென்னையில் உள்ள இவரின் 400 சதுர அடி கொண்ட வீடு, 2016-ம் ஆண்டு அடித்த வரதா புயலில் சிதைந்துபோனது. அதனை மீண்டும் கட்டமைக்க இவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதற்காக அவர், தான் சிறிது சிறிதாக சேர்த்துவைத்திருந்த இரண்டு இலட்சம் ரூபாயுடன், டாக்டர் அப்துல் கலாம், கொடுத்த வாகனத்தின் ஆர்.சி.புக் மற்றும் தங்க மெடலையும் அடகு வைத்துள்ளார். இதற்கு மாதம் மாதம் தனது குறைவான வருமானத்திலிருந்து மாதத் தவனையை கட்டிவருகிறார். இந்த வாகனம் அடமானத்தில் உள்ளதால் அதனை சரிவர இயக்கமுடியாமல் உள்ளார். தற்போது டாக்டர் அப்துல் கலாம், கொடுத்த வாகனத்தையும் தங்க மெடலையும் மீட்க பல்வேறு தரப்புகளிடமிருந்தும் சமூக செயற்பாட்டாளர்கள் நிதியுதவி கோரிவருகின்றனர். இந்த தொகை நேரடியாக அவரின் வங்கி கணக்கில் செல்லுத்தும் வகையிலும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவருக்கு கிடைக்கும் நிதி மூலம் அவர் முதலில் அடமானம் வைத்துள்ள தனது வாகனத்தின் ஆர்.சி.புக்-ஐயும், தங்க மெடலையும் மீட்க உதவும். அதற்குப்போக மீதமிருக்கும் பணத்தில் மேலும் மரங்களை நடத் திட்டமிட்டுள்ளார் என்றும் அந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக அவரின் வங்கி விவரங்களை அவர்கள் கொடுத்துள்ளனர். நம்மால் நேரடியாக களத்தில் இறங்கி மரம் நடமுடியவில்லை என்றபோதும் இதுபோன்ற உதவிகளால் நாமும் சமூக செயற்பாட்டாளராகலாம்.
அவரின் வங்கி கணக்கு விவரம்:
A/C no : 700701707084418
A/C name : GOPAL MULLAIVANAM
IFSC code : YESB0CMSNOC
A/C no : 028901000034917
A/C name : G.MULLAIVANAM
BANK : Indian overseas bank
BRANCH : Virugambakkam
IFSC code : IOBA0000289
UPI முறையில் பணம் அனுப்ப விரும்பினால்
supportgopal18@yesbankltd