Skip to main content

இன்றைய அரசியல் அவியல்..!

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
இன்றைய அரசியல் அவியல்..!

அவ்வளவு நாகரிகமானவரா மோடி?

காலங்காத்தால பேப்பரை தொறந்தா மணிசங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கிட்டதா போட்டிருக்காங்க. அவர எதுக்குய்யா நீக்குனாங்கன்னு பாத்தா, மோடியை கீழ் சாதிக்காரர் என்று சொல்லிவிட்டதாகவும், இது ராகுலுக்குப் பிடிக்காததால் கட்சியை விட்டு நீக்கிட்டதாகவும் சொல்லியிருக்காங்க.



ஆனால், உண்மை அது இல்லையாம். மணி சங்கர் அய்யருக்கு இந்தி சரளமா தெரியாது என்பதால், நீச் என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்தியிருக்காரு. நீச் என்றால் கீழ் சாதியைக் குறிக்குமாம். ஆனால், மோடி தரம் தாழ்ந்து பேசுகிறார் என்றே சொல்ல வந்தாராம். தெரிந்து அந்த வார்த்தையை பயன்படுத்தலையாம். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக அய்யர் சொல்லியிருக்கார்.

மணி சங்கர் அய்யரின் பேச்சைப் பயன்படுத்தி, மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தை திசை திருப்ப முயற்சித்தார். தன்னை கீழ்சாதிக்காரன் என்று காங்கிரஸ் திட்டுகிறது என்றும், தான் ஒரு கீழ்சாதிக்காரன்தான் என்றும், அடித்தட்டு மக்களுக்காக உழைப்பவன் என்றும் மோடி சீன் போடப் பார்த்தார்.

அய்யரை கட்சியைவிட்டு நீக்கியிருப்பதால் மோடியின் பிரச்சாரம் எடுபடாது என்று காங்கிரஸ் நினைக்கிறது. மோடி அப்படியெல்லாம் நாகரிகமானவர் இல்லை. இந்தப் பிரச்சனையை விடாமல் தொற்றிக்கொண்டிருப்பார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

அப்புறம், பாஜகவின் நாகரிகத்திற்கும் சமூகப் பொறுப்புணர்வுக்கும் இன்னொரு செய்தியையும் உதாரணமாக சொல்லலாம்...


முஸ்லிமைக் கொன்றால் அரசியல் பிரச்சனையா?



மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் ராஜஸ்தானுக்கு வேலைக்காக சென்றார். அவர் இந்துப் பெண்ணை காதலித்தார் என்று சொல்லி, ஓட ஓட விரட்டி, வெட்டி கொன்று, தீ வைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்நிலையில் எல்லைப்பகுதி பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் மம்தாவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அப்போது, ராஜஸ்தானில் இஸ்லாமியர் ஒருவரை வெட்டிக் கொன்று, தீவைத்து எரித்திருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

உடனே, அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று சொன்ன ராஜ்நாத்சிங், பேட்டியை ரத்து செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர், ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கேள்வியை அரசியல் கேள்வி என்று தவிர்த்திருக்கிறார் என்றால் பாஜகவின் லெவல் என்னான்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்