Skip to main content

நம்முடைய போராட்டங்களை யார் தீர்மானிப்பது..? - திருமா பேச்சு!

Published on 31/01/2020 | Edited on 01/02/2020

நீட் தேர்வை எதிர்த்து திராவிட் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடைபற்று வந்த போராட்டம் நேற்று சென்னை நிறைவடைந்தது. இதில் பேசிய திருமாவளவன் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " நீட் என்ற தேர்வை எதிர்த்து தமிழகமே போராடி கொண்டிருந்தோம். இப்போது நம்முடைய போராட்டம் மாறியிருக்கின்றது. நம்முடைய கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. நாம், மோடி முன்வைக்கின்ற அரசியலுக்கு பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த நீட் தேர்வு தேவையில்லை என்பதை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் ஆசிரியர்கள் அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கி இன்று சென்னையில் முடித்திருக்கின்றார். இனி போராடினால் எந்த பயனும் இருக்காது என்று யாரும் சோம்பலாக இருந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அவருடைய இந்த பயணம் நமக்கெல்லாம் உந்து சக்தியாக இருந்து வருகின்றது. போராட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதல்ல நம்முடைய பிரச்சனை, அது ஆட்சியாளர்களின் கவனத்துக்கு சென்றதா என்ற நோக்கில் நாம் போராட்டம் இருக்க வேண்டும் என்று பெரியார் அடிக்கடி போராட்டத்தை பற்றி கூறுவார். அதே அணுகுமுறையை அவரின் வாரிசான அய்யா ஆசிரியர்கள் அவர்கள் இன்றைக்கு கடைபிடித்து இந்த போராட்டத்தை முன்எடுத்துள்ளார்.



 

fgh

அய்யா அசிரியர்கள் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல் போராட்டகளத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றார். தற்போது நாமெல்லாம் எதிர்த்து வருகின்ற சிஏஏ போராட்டத்திலும் களத்திலும் நிற்கின்றார்.  நாம் எல்லாம் மறந்து வெகுதூரம் சென்றுவிட்ட நீட் எதிர்ப்பு போராட்டத்திலும் முதல் ஆளாக தொடர்ந்து இருந்து வருகின்றார். மத்திய அரசும் மாநில அரசும் நம்முடைய போராட்டத்தை அலட்சியபடுத்தினாலும் நாம் அதற்கெல்லாம் சோர்வுறாமல் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் அவர்களின் போராட்டம் நமக்கு சொல்லித்தருகின்றது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு என்ற பாதிப்பு என்று கேட்கிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாம் எல்லோரும் போராடி வருகின்றோம். அப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த குடியுரிமை சட்டம் அகதிகளின் நலனுக்கானதா என்றால் அப்படி ஏதுமில்லை. மதம் அவர்களின் குடியுரிமையில் பிரதானப்படுத்தப்படுகின்றது. நம்முடைய போராட்டங்களை நாம் தீர்மானிக்க முடியாமல் மோடியின் கொள்கைகளுக்கு எதிராக ஓடிக்கொண்டிருக்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது" என்றார்.