அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டியூட் ஃபார் எனர்ஜி அண்ட் எக்கனாமிக்ஸ் அண்ட் ஃபைனான்சியல் அனாலிசிஸின் (ஐஇஇஇஎப்எ) புதிய ஆராய்ச்சியில், தமிழ்நாடு சூரிய மற்றும் காற்று சக்தியை உற்பத்தி செய்வதில் உலகளவில் ஒன்பதாம் இடம் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், நிறுவனத்தின் மாற்றுசக்தி எங்கு உற்பத்தியாகிறது மற்றும் தற்போதைய நிலை என்ன. இதில், வணிகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் பயன்படுத்துபவர்களின் தரவரிசையுள்ளது. அத்தரவரிசையில் டென்மார்க், மேற்கு ஆஸ்திரேலியா, உருகுவே, ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், டெக்ஸாஸ், கலிபோர்னியா மற்றும் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளது.
2017ஆம் ஆண்டு டென்மார்க் காற்று மற்றும் சூரிய சக்தியை உற்பத்திசெய்து அதில் 52.8 சதவீதம் பகிர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு உற்பத்தியில் 14.3 சதவீதத்தை பகிர்ந்து இந்த தரவரிசையில் ஒன்பதாம் இடம்பிடித்துள்ளது. அறிக்கையில், தரவரிசையில் இருக்கும் ஒன்பது நாடுகளை சேர்ந்த மாநிலங்கள் எவ்வாறு காற்று மற்றும் சூரிய சக்தியை உற்பத்தி செய்கிறது, எவ்வளவு பகிர்கிறது மற்றும் வணிகத்தில் அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு என்ன நிலை என்று புதுப்பிக்கத்தக்க சக்தியை பற்றி முழுவதுமாக தெரிவிக்கின்றது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வணிகத்தில் பகிர்வதில் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடுதான் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் கருவிகளை பொருத்தியிருக்கிறது. கடந்த வருடத்தின் நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 30 ஜிகாவாட் ஆற்றலை உற்பத்திசெய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன, இதில் காற்று மற்றும் சூரியசக்தி சேர்த்து 9.6 ஜிகாவாட், அதாவது 30 ஜிகாவாட் மொத்தத்திற்கு இதிலேயே 32% கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களான நீர் மின்சாரத்தில் 2.2ஜிகாவாட்டும் அணுமின்நிலையத்தில் 8% பையோமாஸ்ஸில் 3% கிடைக்கின்றது.
மொத்தத்தில் தமிழ்நாடு கசிவற்ற மின்உற்பத்தி திறனால் 50% முன்னணியை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் முக்கால்வாசி புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் எல்லாம் இறுதிகட்டத்தில் இருக்கும் காற்றாலைகளின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது, 15 முதல் 25 வருடம் பழமையான காற்றாலைகள், இதில் சராசரியான உற்பத்தி 18% குறைந்துவருகிறது. இருந்தாலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பங்குகள் ஆச்சரியத்தை அளிக்கின்றது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை பற்றி கூறுகையில், "தமிழ்நாட்டை சிறப்பாக வைத்துக்கொள்ள பலதரப்புப்பட்ட ஆற்றல்களை பயன்படுத்த வேண்டும் என்றும். சூரிய சக்தியை உற்பத்தி செய்ய அரசாங்கம் நிறைய மானியங்கள் அக்கருவியை வாங்குபவர்களுக்கு பயன்படுத்துவர்களுக்கும் தரவேண்டும்" என்றும் கூறியுள்ளார். மேலும், புதிதாக மாற்ற இருக்கும் காற்றாலைகளின் மூலம் 80 சதவீதம் தேவைகள் உயர்த்தப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி, கற்றாலையின் மூலம் 8000 மெகாவாட் மற்றும் சூரிய சக்தி 2,500 மெகாவாட் கிடைக்கின்றது. மிழகத்தில் கீரின் பவர் எனப்படும் சுற்றுசூழலுக்கு எந்த பங்கமும் விளைவிக்காத ஆற்றல்களான பையோமாஸ், சூரிய, காற்று சக்தி போன்றவைகளை பயன்படுத்தினால் அரசாங்கத்திற்கும் லாபகரமானது மற்றும் பயன்படுத்தும் மக்களுக்கும் குறைந்த அளவு மின்கட்டணங்களே வரும். அதேபோல, வெளிநாடுகளில் இருந்த அணுமின்நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை உற்பத்தி செய்ய நாட்டம் காட்டிவருகிறது. ஆனால் நம் மத்திய அரசோ அணுமின் நிலையங்களின் மூலமாகத்தான் இந்தியாவுக்கு அதிகளவு மின்சாரம் கிடைக்கும் என்று புதிது புதிதாக திறந்து சுற்றுசூழலை ஒழிக்க காத்துக்கொண்டிருக்கிறது.