ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து ஜி.ரா. கருத்து

தான் அரசியலுக்கு வருவதாகவும், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியாக, தான் அரசியலுக்கு வருவதாக முடிவெடுத்துவிட்டேன் என்று அவர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு வருவது ஜனநாயக உரிமை. யார் வேண்டுமானாலும் வரலாம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடபோவதாக தெரிவத்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள், அகில இந்திய அளவில் உள்ள தேசத்து மக்கள் சந்தித்து வரக்கூடிய பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது, அவர் கடைப்பிடிக்கக் கூடிய கொள்கை என்ன என்பதையும் அவர் அறிவித்தார் என்றால் மக்களை அவரையும், அவரது இயக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
-வே.ராஜவேல்