Skip to main content

நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம்

Published on 10/01/2018 | Edited on 10/01/2018
நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம்




இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு மக்களவையில் இரண்டு  மந்திரிகள் கைபேசியில் ஆபாசப்படம் பார்த்தனர். அவர்கள் ஆபாசப்படம் பார்ப்பது போன்ற வீடியோவும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பெண்களை கடவுளாக மதிக்கும் இந்தியாவில் அமைச்சர்கள் இவ்வாறு செய்வதா, அதுவும் மக்களவையில் என்று எதிர்கட்சிகளெல்லாம் கேள்வி எழுப்பினர். பிறகு அந்த செயலை செய்த இரண்டு பேரும் மற்றும் அந்த கைபேசியின் உரிமையாளரையும் சேர்த்து மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்த காரியத்தை செய்தவர்கள் எல்லாம் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் ஆபாசப்பட சர்சைகள் நடக்கிறது.



அதாவது நாடாளுமன்றத்தில் யாரும் வீடியோ பார்த்து மாட்டிக்கொள்ளவில்லை, ஆனால் பார்க்கின்றனர் என்கிறது இங்கிலாந்து பிரஸ் கூட்டம். நாடாளுமன்றத்தில் இருக்கும் இணையதள சேவையில் தினமும் சராசரியாக 160 முறை ஆபாசப்பட தளங்கள் உபயோகிப்பதாகவும், ஜூன் மாதத்தில் இருந்து அக்டொபர் 2017 வரை 24,000 முறை ஆபாச வலைத்தளங்கள் உபயோகம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆபாசப்பட தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் ஆபாச வலைத்தளங்கள் தேடப்படுவதாக  நாடாளுமன்ற நெட்ஒர்க் டேட்டா சேவையில் காட்டுகிறது. இதுபோன்ற ஆய்வு எடுப்பதற்கு காரணம், பிரதமர் தெரசா மே,  டேமியன் கிரீன் என்ற அமைச்சரை ஆபாசப்படத்தை தன் கணினியில் வைத்திருந்தார் என்பதற்காக பதவியை விட்டு விலக்கியதுதான். சர்ச்சையை கிளப்பிய இந்த விஷயத்தால்தான் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற ஆய்வுகளெல்லாம் வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான ஆபாசப்பட தளங்களை தடை செய்துள்ளது அரசு. அப்படி தடை செய்யப்பட்டவை சுமார் 800க்கும் மேற்பட்ட தளங்களாம், இருந்தும் தினசரி 20 மில்லியனுக்கும் மேலானவர்கள் ஆபாசப்பட தளங்கள் பார்க்கப்படுகிறார்களாம். மேற்கொண்டு நிறைய பள்ளி மாணவர்கள் இதுபோன்ற வீடியோக்களுக்கு அடிமையாகி வருவதாகவும், சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆபாசப்படங்கள் அதிகம் பார்க்கப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாமிடத்திலும்,  இந்தியா நான்காமிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

-சந்தோஷ் குமார்

சார்ந்த செய்திகள்