Skip to main content

2021ல் ரஜினி கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்! - சொல்கிறார் பொங்கலூர் இரா. மணிகண்டன்

Published on 13/03/2020 | Edited on 14/03/2020

போயஸ் கார்டன் இல்லத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வருங்கால முதல்வர் எனச் சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும்" என தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிய புதிய அறிவிப்பை அவர் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதுமட்டும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு பதவி, 65 சதவீதம் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற மூன்று திட்டங்களை   தெரிவித்தார்.

 

PONGALUR MANIKANDAN



ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ''ரஜினி விரும்பும் அரசியல் எழுச்சி உருவாக எல்லோரும் திரளுவோம். அரசியல் புரட்சி உருவாக மக்களிடையே புரட்சியை ஏற்படுத்துவோம். ரஜினியை ஆதரித்து கொங்கு மண்டலத்தில் புதிய இயக்கம் தொடங்குவோம்' என்று பொங்கலூர் இரா. மணிகண்டன் நக்கீரன் இணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதையடுத்து பொங்கலூர் இரா. மணிகண்டனை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் கட்சித் தொடங்குவதற்காக ரஜினி வைத்துள்ள மூன்று திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமாகும். அது சாத்தியமானால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்.

சட்டபேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது. இந்தத் திட்டங்கள் எப்படி சாத்தியமாகும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனரே?

தமிழகத்தில் இருக்கும் இரண்டு கட்சிகளும் சாதாரண கட்சி கிடையாது. இந்தத் திட்டங்களை முன்பே கூறியிருந்தால் அதை திசை மாற்றி இருப்பார்கள். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதில் ஒரு நல்லதும் இருக்கிறது. 
 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே கட்சியில் இருப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பிறகு அது தேவை இல்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆட்சி அமைப்பதற்காக ஒரு அமைப்பு தேவை. ஆட்சி அமைத்தபிறகு மக்களுக்கு எது தேவையோ, அது ஆட்சியின் மூலம் செய்யப்படும். அதன் பிறகு கட்சி அமைப்பு தேவையில்லையே. அந்த அமைப்பு அடுத்த தேர்தலுக்குத்தான் தேவைப்படும்.

இது உங்களுடைய நிலைப்பாடாக இருந்தால் அரசியல் கட்சிக்கு நிர்வாகிகள் வருவார்களா?

கண்டிப்பாக வருவார்கள். இது வரை இல்லாத ஒரு புது மாதிரியான விஷயம் இதுதான். வெளிநாடுகளில் இப்படித்தான் உள்ளது. 24 மணி நேரமும் கட்சிதான் தொழில் என்று இருக்க கூடாது. அதை மாற்றுவதற்காகத்தான் இது கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய அரசியல் கட்டமைப்புதான் இருக்கும் என்றால் ரஜினி தேவையில்லையே. புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இது நடைமுறை சாத்தியமும் கூட. கட்சி நிர்வாகிகளும் கட்சி பதவி எதுவும் தேவையில்லை, ஒரு மாற்றம் நடந்தால் மட்டும் போதும் என்றுதான் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் 30 சதவீத வாக்காளர்கள் எந்த கட்சியையும் சேராமல் இருக்கிறார்கள். அவர்கள் செலுத்தும் வாக்குத்தான் இரண்டு கட்சிகளையும் மாற்றி மாற்றி ஆட்சிக்கு கொண்டுவருகிறது. அவர்கள் மத்தியில் ரஜினி கூறிய செய்தி சென்றிருக்கும்.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு என்று தெரிவித்திருக்கிறார். தேர்தலில் ரஜினி ஒரு இளைஞரை நிறுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சிக்கு வர மும்மரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவும், தற்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் ஒரு வல்லவரை வேட்பாளராக நிறுத்தும் போது, அந்த இளைஞரின் வெற்றி எப்படி சாத்தியமாகும்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பண விநியோகம் நடத்தியது. ஆனால் மக்கள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. இதே போல் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்தார்கள். ஆனால் மக்கள் பணம் கொடுத்தவரை தோற்கடித்து விட்டு, பணம் கொடுக்காதவர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆரம்பித்தில் மக்கள் பணத்திற்காகத்தான் வாக்களித்தார்கள். அனைவரையும் சொல்லவில்லை. ஆனால் தற்போது மாற்றம் வந்துவிட்டது. கட்சிக்காரர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற அளவிற்கு மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் கமல் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றார். சீமான் பெற்ற வாக்குகளும் அப்படித்தான். இது எல்லாம் விலைமதிப்பில்லாத வாக்குகள். தற்போது பணம் கொடுப்பவர்களுக்கு எதிராகவே மக்கள் திரும்புகிறார்கள். 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



கட்சிக்கு இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமா?. விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய போது அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிக அறிவித்து, அவரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது. அதன் பிறகுதான் அவர் எதிர்கட்சி தலைவர் பதவி வரை வந்தார். அப்படி இருக்கும் போது இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவது தமிழக அரசியலுக்கு ஒத்து வருமா?

நாம் அரசியலை மக்களிடம் அப்படியே பழக்கி வைத்து விட்டோம். இனிமேல் மக்கள் ஒரு அமைப்பிற்காக ஓட்டு போட வேண்டும். ரஜினிதான் நாட்டை ஆள வேண்டும் என்று இல்லையே. நல்லவர் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம்.

இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை ரஜினி கூறி, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் மக்கள் ஓட்டு போடுவார்களா?

ரஜினி கூறுவதை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

ரஜினியின் பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால் கட்சி தொடங்குவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர் கட்சி தொடங்கினாலும் எம்ஜிஆர் மாதிரி வர முடியாது என்று கூறுகிறார்கள். அவர் உண்மையிலேயே கட்சி தொடங்குவாரா? 2021ல் தேர்தலில் நிற்பாரா?

நான் சிறுவனாக இருந்த போது கோவை செழியனோடு சென்று ரஜினியை பார்த்தேன். அப்போது அரசியலுக்கு வருவது குறித்து பிடி கொடுக்காமல்தான் பேசினார். ஆனால் அன்று இருந்த நிலை வேறு. இன்று உள்ள நிலை வேறு. அதனால் அவர் உறுதியாக அரசியலுக்கு வருகிறார். தற்போது இவ்வாறு பேசுவது, இந்த பேச்சு மக்கள் மத்தியில் எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்பதற்காக மட்டுமே, நூறு சதவீகிதம் அவர் 2021ல் அரசியலுக்கு வருகிறார். அதிமுக, திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ரஜினியுடன் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரும் எல்லா கட்சியில் இருந்தும் வாருங்கள் என்றுதான் கூறுகிறார். யாரையும் வெறுக்கவில்லை. அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று ரஜினி கூறுவது வரவேற்க வேண்டிய ஒன்று. 2021 தேர்தலில் ரஜினி - மற்ற கட்சியினர் என்றுதான் போட்டி இருக்கும். ரஜினியை எம்ஜிஆர்வுடன் ஒப்பிடாதீர்கள். அன்று இருந்த மக்கள் மனநிலை வேறு, இன்று உள்ள மனநிலை வேறு. தற்போது ஆட்சி மாற்றம் வேண்டாம். அரசியல் மாற்றம் வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2021ல் ரஜினி வழிகாட்டுதலின் பேரில் ஆட்சி நடக்கும். அவர் கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.