Published on 10/10/2018 | Edited on 10/10/2018
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் கடந்த ஒரு வருடமாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு அதன் நிறைவு விழா அண்மையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய எடப்பாடி பல்வேறு திட்டங்களை அறிவிக்கையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.