முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி, அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற பிறகு கூட்டணிக்குள் நிழவும் குழப்பங்களைப் பற்றி நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் முன்பு தேசியவாத காங்கிரஸ்( அஜித் பவார் மற்றும் சரத் பவார்) முதல் இடத்திலும், சிவசேனா கட்சி(ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே) இரண்டாம் இடத்திலும் காங்கிரஸ் மூன்றாம் இடத்திலும் பா.ஜ.க. நான்காம் இடத்திலும் இருந்தது. ஆனால் இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நான்காம் இடத்தில் இருக்கிறது. பா.ஜ.க. முதல் நிலைக்கு மாறியுள்ளது. காங்கிரஸ் முன்னதாக பெரும்பான்மை உள்ளவர்கள் முதல்வர் என்றும் அதைவிடக் குறைவாக வாக்கு எண்ணிக்கை வைத்திருப்பவர் துணை முதல்வர் என்றும் கடைபிடித்து வந்தனர். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதாவது கட்சிகளை உடைத்து அந்த கட்சிகளிருந்து ஆட்களைக் கூட்டணிக்கு கொண்டு வருவபவர்தான் முதலமைச்சர் என்றாகிவிட்டது.
தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பில்லை, ஏக்நாத் ஷிண்டேவை தவிர மற்றவர் முதல்வர் ஆகப்போவதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்தது அமித்ஷாதான். தேர்தலுக்கு முன்பு மகாயுதி கூட்டணிக் கட்சிகள் யார் வெற்றி பெறப் போகிறோம்? என்று பேச்சு வார்த்தை நடத்தாமல் யார் முதல் ஆகப்போகிறார்? என்ற பேச்சு வார்த்தையை நடத்தினார்கள். அதில் ராஜ்நாத் சிங் பெயரும் வந்தது. முதலில் தேவேந்திர பட்னாவிஸ் ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுத்ததால் அவரை பா.ஜ.க. கட்சியின் நல்ல பொஷிசனுக்கு கொண்டு போவதாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் போட்டியிட்ட இடங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் வெற்றி கிடைத்தது பா.ஜ.க-வே எதிர்பார்க்காதது.
பா.ஜ.க.-வின் அந்த வெற்றி ஏக்நாத் ஷிண்டேவின் நிர்வாக திறமையின்மையால் நடந்த தேர்தல்தான் காரணம். எலக்ரானிக் வாக்கு இயந்திரம் பா.ஜ.க. வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. அதோடு பல தில்லு முல்லுகளுடன் தேர்தல் நடைபெற்றது. 280 தொகுதிகளில் செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணாமல் அதைவிடக் குறைவான வாக்குகள் எண்ணி முடிவை அறிவித்திருக்கின்றனர். மீதமுள்ள தொகுதிகளில் இருக்கும் வாக்குகளைவிட அதிகமான வாக்குகளை எண்ணி முடிவை அறிவித்திருக்கின்றனர். இதுபோல மூன்று விதமான விதிமீறல்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதைக் கண்டித்து நடுநிலையாளர்கள் பலர் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஒருபக்கம் பேசி வருகின்றனர்.
மகாயுதி கூட்டணி வெற்றிக்குப் பிறகு பதவியேற்பு பேச்சு வார்த்தை நடந்தது. அதில் ஏக்நாத் ஷிண்டே தனது சட்டமன்ற உறுப்பினர்களுடன் இறங்கி வராமல் இருந்தார். அதில் அமித்ஷா வந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தார். அஜித் பவார் டம்மியாக இருக்க கூடாது என்பதால் இரு துணை முதல்வர்களும் முதலமைச்சரும் சேர்ந்து கொள்கை ரீதியான முடிவை எடுப்போம் என்று பேசியிருக்கிறார்கள். இந்த பேச்சு வார்த்தையின்போது தேவேந்திர பட்னாவிஸ் டம்மியாக உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி முதலமைச்சர் பதவியை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளனர். பா.ஜ.க.-வுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி கவிழ்ப்பு அரசியல் மூலம் கிடைத்திருக்கிறது.
அஜித் பவாரிடம் இருக்கக் கூடிய ஆட்கள் கடந்த முறை ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் ஆகும்போது பிரச்சனை செய்திருக்கிறார்கள். அதே போல் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அஜித் பவாரிடமிருந்து பிரிந்து சரத் பவாரிடம் செல்லப் போவதாக போர்க்கொடி தூக்கினார்கள். அந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போது மூன்று அமைச்சர்களுக்கு மட்டுமே மந்திரி சீட்டு கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முக்கியத்துவம் தருவதாக அஜித் பாவாரிடம் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று சொல்லி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவாக இருப்பதால் அஜித் பாவரும் குரலை அடக்கி பேசி வருகிறார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் குரல் அதிகமாக கூட்டணிக்குள் எழுகிறது. இதனால் அஜித் பவாரிடமுள்ள அந்த சீனியர்கள் சரத் பவாரிடம் செல்லவுள்ளதாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்றார்.