Skip to main content

ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தலுக்கானதல்ல... அடுத்த தலைமுறைக்கானது! மு.ஞானமூர்த்தி

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 


அரியலூர் மாவட்டம், செந்துறை திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இரண்டு பிரதான கோரிக்கையை முன்னிருத்தி 20-7-1980ல் வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1. மாநிலத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2. மத்தியில் வன்னியர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்கவேண்டும். 

 

mkstalin



இந்த கோரிக்கைகளால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்னியர் சங்கத்தில் இணைந்தனர். 
 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் சாலைமறியல், ஒருநாள் இரயில் மறியல், ஒருவாரம் சாலைமறியல், தேர்தல் புறக்கணிப்பு என பல்வேறு களப்போட்டங்களை வன்னியர் சங்கம் நடத்தியது. போராட்ட காலகட்டத்தில் லட்சக்கணக்கான வன்னியர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருலட்சம் பேருக்குமேல் வழக்கு போடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு போராட்டத் தலைவர்களை அழைத்துப்பேச மறுத்தது. 
 

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபோதுதான் சேலம் வீரபாண்டியார் மூலமாக போராட்ட தலைவர்களை அழைத்து வரச்சொல்லி அவர்கள் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுவதற்க்கான முயற்சியை எடுக்கிறேன் என்று பேசி அனுப்பி வைத்தார்கள். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து 20% இட ஒதுக்கீடு  அறிவித்தார் கலைஞர்.  


 

 

கலைஞர் அறிவித்த அன்று அந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு வெடிவெடித்து கொண்டாடினோம்.  மறுநாள் வன்னியர் சங்கத் தலைவர்கள் கூடி இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டால் கலைஞருக்கு வன்னியர்களின் ஆதரவு கூடிவிடும். நமது இயக்கம் வளர்ச்சி அடையாது என கூறி இந்த இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவேண்டும், கலைஞர் எங்களை ஏமாற்றிவிட்டார், வன்னிய இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடுங்கள் என அறிக்கை விட்டார்கள். 
 

ஒரு கனியை கொடுத்திருக்கிறேன் சுவைத்துப் பாருங்கள். ருசி இல்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டார்கள். 
 

பிறகு அந்தப்போராட்டம் கடுமையாக இல்லாமல் மாற்றிக்கொள்ளப் பட்டது. 
 

இப்போது ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருப்பது வன்னியர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 
 

மேலும் சாலைமறியலில் உயிரிழந்த போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்திருக்கிறார். 
 

அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களை மரம்வெட்டிகள் என ஜெயலலிதா பேசினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் இட ஒதுக்கீட்டு போராளிகள் என சட்டமன்றத்திலேயே அறிவித்து போராடியவர்களை போராளிகள் என கௌரவப்படுத்தினார்.
 

 சாலைமறியலில் உயிரிழந்த குடும்பதுக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியும், மாதம் ரூ. 3 ஆயிரம் இழப்பீட்டு நிதியும் வழங்குவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார் கலைஞர். அதை வழங்கினார். ஸ்டாலின் திமுக தலைவராக வந்த பிறகு வன்னியர்களுக்கான முதல் அறிவிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீட்டில் உயிர்தியாகம் செய்தவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். 
 

இந்த அறிவிப்பால் வன்னிய இளைஞர்கள் ஸ்டாலின், செய்வதைத்தான் சொல்வார், சொல்வதைத்தான் செய்வார் என்று தங்களின் நிலைப்பாட்டை திமுக தலைவருக்கு ஆதரவாக திசை திரும்பி இருக்கிறார்கள். 
 

முன்னாள் அமைச்சர் விக்கிரவாண்டி ஏ. கோவிந்தசாமி திமுகவின் வளர்ச்சியிலும், வன்னியர்களின் பிரதிநிதியாகவும் இருந்தார். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 

ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மூத்த தலைவர்களை திமுக என்றைக்கும் புறக்கணிக்காது என்பதற்கான ஒரு நற்சான்று. 


 

 

வன்னியர்களுக்கு தொடர்ந்து பல சலுகைகளை செய்துவரும் திமுகவை வசைபாடுவதிலேயே சில வன்னியர் தலைவர்கள் முனைப்பாக உள்ளனர். 

 

mg

வன்னியர்களுக்கு இதுவரை எதுவுமே செய்யாத அதிமுகவை தூக்கிப்பிடித்து கொண்டாடும் சில வன்னியர் சங்க தலைவர்கள் தங்கள் சுயலாபத்திற்க்காகவே என்பதை இட ஒதுக்கீட்டுப் போராளிகள் உணர்ந்துள்ளனர். 
 

இவர்கள் 10 ஆண்டுகாலம் மத்திய அரசில் நாடாளுமன்ற உருப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்களகவும் இருந்தார்களே என்றைக்காவது மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2% தனி இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று பேசியதுண்டா? மத்திய அமைச்சர்களுக்கு வருமானம் வரும் இலாக்காவை கெஞ்சி, கேட்டுப் பெற்றார்களே, இடஒதுக்கீடு தருவதற்கு அதிகாரம் படைத்த இலாக்காவை பெற்றிருந்தால் இவர்களே வன்னியர்களுக்கு மத்தியில் 2% இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாமே ஏன் செய்யவில்லை?
 

  ஸ்டாலினின் வன்னியர்களுக்கான இந்த அறிவிப்பு அடுத்த தேர்தலுக்கானதல்ல! அடுத்த தலைமுறைக்கானது! நன்றி.