
இந்த உலகில் குத்துச்சண்டையில் மெர்சல் காட்டுபவர்கள் யார் என கேட்டால் முகமது அலி, மைக் டைசன் என கூறுவோம். ஆனால், நமக்கெல்லாம் தெரியாமல், ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டை வீரன் மெண்டிஸ் ஸ்ரீம்ப் (mantis shrimp) தான். கடல்வாழ் உயிரினமான இந்த 'மெண்டிஸ்' அதிகபட்சம் 46 சென்டிமீட்டர் மட்டுமே வளரக்கூடிய ஒரு பூச்சி. ஆனால், கடலுலகில் வாழும் உயிரினங்களில் மிகவேகமாக குத்துச்சண்டை இடக் கூடியவர் இவரே. உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் இந்தப் பூச்சி வேட்டையாடி சாப்பிடக் கூடியது.

இதன் ஒரு குத்தில்(punch), கிட்டத்தட்ட 1500 நியூட்டன்(Newton) ஆற்றல் வெளிப்படும். 82 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கும் இது தன்னைவிட பெரிய எதிரிகளையும் நடுங்க செய்யும். தன் எடையைவிட 2500 மடங்கு அதிகமான ஆற்றல் அதன் ஒரு குத்தில் வெளிப்படும். இதே அளவு மனிதன் செயல்பட்டால் அவனால் இரும்பை உடைக்க முடியும். இரையைத் தாக்கும்போது பலம் மட்டுமல்ல வேகமும் மிக அதிகம். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 800 முறை குத்து விடக்கூடியது. இது இரையை தாக்கும்பொது இதன் வேகத்தால் வெப்பம் வெளிப்படுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 'ஓங்கி அடிச்சா 1500 நியூட்டன் வெயிட்டுடா' என்று கடலுக்கடியில் 'பஞ்ச்' பேசுமோ என்னவோ...
கமல் குமார்