Skip to main content

காதல் டூ கல்யாணம்!

Published on 12/12/2017 | Edited on 12/12/2017
காதல் டூ கல்யாணம் 

விராட் - அனுஷ்கா லவ் ஸ்டோரி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் நேற்று இத்தாலியில் மிலன் நகரில்  திருமணம்  நடைபெற்றது.  இந்த திருமண நிகழ்வு கோலியின் ரசிகைகளின் மனதில் இடி விழுந்தது  போல் ஆனது. சமூகவலைதளங்களில் ஸ்டேட்டஸ்கள் போட்டு மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தனது திருமண புகைப்படங்களை விராட் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.  இவர்களின் அழகிய காதல் பயணம் பற்றிய ஒரு  தொகுப்பு.

விளம்பரத்தில் தொடங்கிய நட்பு 





2013 ஆம் ஆண்டு விராட்டும் அனுஷ்காவும் ஒரு ஷாம்பூ  விளம்பரத்தில் நடித்தனர். பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக பழகத்தொடங்கினர். அதன் பின் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளனர். இந்த தகவல் பல வதந்திகளை கிளப்பியது.

அனுஷ்கா வீட்டில் விராட் 




 
2014 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையத்திற்கு வந்து, பின்னர் ஓய்வு எடுப்பதற்காக நட்சத்திர ஹோட்டலுக்கு  சென்றுவிட்டனர். ஆனால்  விராட்கோலி அனுஷ்கா ஷர்மாவின் அப்பார்ட்மென்டில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அப்பொழுது அனுஷ்கா தன் காரை அனுப்பி விராட்டை தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டார். அதே ஆண்டு இருவரும் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு  ஜோடியாக வந்து "இந்தியன் சூப்பர் லீக்" போட்டியில் கோவா அணியை ஆதரித்து போட்டியை காண வந்திருந்தனர்.

சதமடித்து பிளையிங் கிஸ் 




நவம்பர் 2014 இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தார். மற்ற வீரர்கள் தனது பேட்டை உயர்த்தி ரசிகர்கள் மத்தியில் காட்டுவர். ஆனால் விராட் தனது காதலை வெளிப்படுத்தும் வண்ணம், போட்டியை காண வந்த அனுஷ்காவை பார்த்து பேட்டை கையில் வைத்து "பிளையிங் கிஸ்" கொடுத்தார் விராட் கோலி. இந்த சம்பவம் இவர்களின் காதலை உலகத்திற்கு தெரிவித்தது.

டுவிட்டால் வந்த டுவிஸ்ட் 




 2015 ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் மார்ச் மாதம் வெளிவந்த "NH 10" படத்தை பார்த்துவிட்டு விராட் தனது டுவிட்டர் பக்கத்தில் (love Anushka's performance) என்று தனது காதலை மறைமுகமாக வெளிபடுத்தியிருந்தார் விராட். இது ரசிகர்கள்  இவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது என உறுதி செய்தனர்.

இருவரும்  சென்ற முதல் விருது விழா 





ஜூலை 2015 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற விருது   விழாவிற்கு இருவரும் ஜோடியாக சென்றனர் இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த விழாவில் அனுஷ்காவிற்கு (beauty of the year) என்ற விருது வழங்கப்பட்டது. இந்த ஜோடியினை மீடியாக்கள் சூழ்ந்து பல புகைப்படங்கள்  எடுத்தனர். அதன் பின் அனுஷ்கா ஒரு தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்தார் அப்பொழுது விராட்டை (handsome companion) என்று கூறினார்.

மங்கியதும் மீண்டும் மலர்ந்ததும் 





பிப்ரவரி 2016இல்  மீடியா விராட்-அனுஷ்கா காதல் விரிசலடைந்தது என்று கூற ரசிகர்களின் மனதில் பேரதிர்ச்சியாக அமைந்தது. இருவரும் அவரவர் துறைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல் வர, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'சுல்தான்' பட வெற்றி விழாவில் இருவரும் வந்து கலந்துகொண்டனர். சிறிது காலம் சற்று இடைவெளி விட்டு இருந்தவர்கள் 2016 டிசம்பர் மாதம் நடைபெற்ற யுவராஜ் சிங்கின் திருமணத்திற்கு, அவர்களும் புதுமண தம்பதிகள் போல வந்து கலந்துகொண்டனர் .

காதலர் தின வாழ்த்து 





விராட் இந்த வருடம் தனது டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்காவிற்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்தார். அதில் விராட் கூறியுள்ளது."நீ நினைத்தால் என் எல்லா நாளும் காதலர் தினம் தான்" என்று தனது காதலை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் அந்த டுவிட்டை நீக்கிவிட்டார் விராட்.

காதல் டூ கல்யாணம் 




விராட் - அனுஷ்காவின் காதல், பிரச்சனைகள் வதந்திகள் என இருந்தாலும் இவர்களுக்கிடையில் இருந்த புரிதலும் அளவுகோல் வைத்து அளக்க முடியாத அளவிற்கு  அவர்களிடமிருந்த காதல் தான் இருவரையும் தற்போது கல்யாணத்தில் இணைத்துள்ளது. இருவரும் திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறவுள்ளனர். 

ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்