தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக ஆதரவாளர் கண்ணையா ராமமூர்த்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அண்ணாமலை குறித்த செய்திகள் அனைத்திலும் ஆழ்ந்த இரங்கல் என்கிற பதிவுதான் இப்போது காணப்படுகிறது. இவர் நடைபயணம் செய்து என்ன செய்யப்போகிறார்? கேரவன் எல்லாம் வைத்துக்கொண்டு இவர் சினிமா ஷூட்டிங் செல்கிறாரா? ஊழல் ஊழல் என்று பேசுகிறார்கள். எந்த ஊழல் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது? பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை இவர்கள் விடுதலை செய்தனர். மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக பலரை இவர்கள் கொலை செய்துள்ளனர். இதுதான் இவர்களுடைய வரலாறு.
கேஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வது குறித்து மோடிக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்துவதற்காகவே இருக்கும் ஒரு இயக்கம் பாஜக. இஸ்லாமியர்களை அடிப்பது தான் இவர்களுடைய கொள்கை. தமிழருவி மணியன் என்பவர் ஒரு வாய் வியாபாரி. அனைத்து தலைவர்கள் பற்றியும் மேடைகளில் பேசி அதன் மூலம் தனக்கு ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டவர் அவர். அண்ணாமலை பற்றியோ, தமிழருவி மணியன் பற்றியோ பேசுவதெல்லாம் கால விரயம் தான். அதற்கு இவர்கள் தகுதியானவர்கள் அல்ல.
இந்தியாவில் ராகுல் காந்தி அலை ஆரம்பமாகிவிட்டது. மோடியின் அலை அஸ்தமனம் ஆகிறது. தென்னிந்தியாவில் பாஜக இப்போது ஜீரோ ஆகிவிட்டது. இப்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை. மிகப்பெரிய கட்சிகள் இணைந்துள்ளதால் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய, வழிநடத்தக்கூடிய கட்சியாக இன்று திமுக இருக்கிறது. கொள்கை ரீதியாக பயணிக்கும் கட்சி இது. குடியாட்சி தத்துவத்தையே மறந்துவிட்டது பாஜக.
மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பாஜக பதிலளிக்க வேண்டும். நிர்பயா விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே முடக்கியது பாஜக. ஆனால் அதுபோல் பல நூறு பெண்கள் பாதிக்கப்பட்ட மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறது. அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ள பாஜக அமைதியாக இருக்க வேண்டும். பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதே அதிமுக சீனியர்கள் எடப்பாடிக்கு செய்து வரும் ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் எடப்பாடி என்ன தான் செய்வாரோ?அதிமுக நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது. எடப்பாடி பழனிசாமி பேசுவதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. அதிமுக ஒரு நல்ல தலைமையின் கீழ் மீண்டும் வலுப்பெற வேண்டும்.