Skip to main content

சின்ன பையன பாத்து காப்பி அடிக்குறீங்களே, வெக்கமா இல்லை... -ஸ்டாலினை விமர்சித்த கமல்ஹாசன்

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

அண்மை காலமாகவே மக்கள் நீதி மய்யம் திமுகவையும், திமுக மக்கள் நீதி மய்யத்தையும் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருக்கின்றன.

 

kamalhaasan


 

முன்பு கமல் ஒரு பேட்டியில் திமுக, அதிமுகவின் அழுக்கு மூட்டைகளை நாங்கள் சுமக்க தேவையில்லை எனக்கூறினார். அதற்கு திமுக ஏடான முரசொலி கமலை ‘பூம் பூம் மாடு என்ன செய்துவிடும்’ என்ற தலைப்பில் விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. ஆனாலும் அடுத்து வந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலினும், கமலும் இயல்பாகவே இருந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளின் அமைப்பான ‘ரோட்டராக்ட்’ (rotaract) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவ்விழாவில் தனது உரைகளுக்கிடையே சில விமர்சனங்களை வைத்துள்ளார்... 
 

ஏன் இங்கே யாருக்கும் தெரியாதா கிராம சபை என்ற ஒன்று இருப்பது. 25 வருஷமா இருக்கு, என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க. ஒரு சின்ன பய, நேத்து வந்த பய சொன்னதுக்கு அப்புறம் அதை காப்பி அடிக்குறீங்களே, வெக்கமா இல்லை. எப்படி எனக்கு தெரியும் கிராமசபையை, நானா கண்டுபிடிச்சேனா, எனக்கு அறிவுரை சொல்வதற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம்னு என் நண்பர்கள் இருந்தாங்க. அதில் செந்தில் ஆறுமுகம்னு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் சார் இப்படி ஒன்னு இருக்குனு சொன்னாரு. அடடே நல்ல ஐடியாவா இருக்கே, இது எத்தனை நாளா இருக்குங்கனு நானும் தெரியாமல்தான் கேட்டு தெரிந்துகொண்டேன். இதுல வெட்கம் என்ன இருக்கு. செவி சாய்க்க வேண்டும் என்பதை பெரிய பாடமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். செவிசாய்த்ததால்தான் இந்த மாதிரியான விழாக்களை நான் விட்டு வைப்பதே இல்லை.  
 

சட்டையையெல்லாம் கிழித்துக்கொண்டு தெருவில் நிற்க முடியாது நான் அசெம்பெளிலலாம்கூட சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க மாட்டேன். அப்படி கிழிந்துவிட்டாலும் வேற சட்டையை மாத்திகிட்டு ஒழுங்கா வெளியே வருவேன். எனக் கூறினார். 
 

இன்று (18.02.2019) வெளியான முரசொலி இதழில் ‘கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்’ என்ற தலைப்பில் கமலை விமர்சித்து கட்டுரை வெளியாகியது குறிப்பிடத்தக்கது.