![kalaignart](http://image.nakkheeran.in/cdn/farfuture/8I4D5TqRyZobC90LH2qhSmrzGjEo93p61f5AdzgA7aI/1533722966/sites/default/files/inline-images/STALN-PTI.jpg)
திமுக தலைவர் கலைஞர் தன்னுடைய அரசியல் சகாப்தத்தில், ஜவஹர்லால் நேரு, குல்ஸாரிலால் நந்தா(ஆக்டிங்) , லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, விஸ்வநாத் பிரதாப் சிங், சந்திர சேகர், பாமூலபர்த்தி வெங்கட்ட நரசிம்ம ராவ், அட்டால் பிஹாரி வாஜ்பாய், தேவ கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என்று 15 பிரதமர்களிடம் அரசியல் செய்துள்ளார்.
குடியரசுத்தலைவர்களான ராஜேந்திர பிரசாத், ராதா கிருஷ்ணன், ஜாகிர் ஹுசைன், வரஹாகிரி வெங்கட கிரி(ஆக்டிங்) , முகமது ஹிதாயாதுல்லா (ஆக்டிங்), ப்ரக்ருதின் அலி அஹமத், பசப்பா தனப்பா ஜட்டி (ஆக்டிங்), நீளம் சஞ்சீவ ரெட்டி, செயில் சிங், ராமசாமி வெங்கடராமன், ஷங்கர் தயால் ஷர்மா, கோச்சேரி ராமன் நாராயண், அப்துல் கலாம், பிரதிப்பா பாட்டில், பிரணாப் முகர்ஜி, ராம் நாத் கோவிந்த் என்று பதினேழு குடியரசுத் தலைவர்களுடன் அரசியல் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பி.எஸ் குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா. ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என்று எட்டு தமிழக முதல்வருடன் அரசியல் செய்துள்ளார்.