Skip to main content

சி.பி.எம்.மில் தகுதியான தலித் ஒருவர்கூட இல்லையா?

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
CPM

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடம் செல்வாக்குப் பெற்றவராக யெச்சூரியும், நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக பிரகாஷ் காரத்தும் இருக்கிறார்கள்.

 

பொதுச்செயலாளர் என்ற வகையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலையில் யெச்சூரி இருக்கிறார்.

 

ஆனால், பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியோ, தேர்தல் உடன்பாடோ கூடாது என்ற பிரகாஷ் காரத்தின் வறட்டுவாத அறிக்கையில் திருத்தம் செய்ய பெரும்பான்மை பிரதிநிதிகள் ஆதரவளித்தது முக்கியமான திருப்பமாகும்.

 

Karat

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் பாப்புலரான கட்சியாக உருவெடுக்க கிடைத்த வாய்ப்பை, தனது வறட்டுவாத நிலைப்பாடால் சீர்குலைத்தவர் பிரகாஷ் காரத் என்ற குற்றச்சாட்டு இப்போதுவரை நீடிக்கிறது.

 

அதுபோல, உப்புக்கல்லுக்கு பிரயோசனம் இல்லாத விஷயத்துக்காக காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ்பெற்று அதன்காரணமாக மேற்கு வங்க ஆட்சியை இழக்கவும் பிரகாஷ் காரத்தே காரணமாக இருந்தார்.

 

இவ்வளவுக்குப் பிறகும், பாஜகவின் அட்டூழியம் நாடுமுழுக்க அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸுடன் கூட்டணியோ, உடன்பாடோ கூடாது என்ற அரசியல் தீர்மானத்தை முன்வைத்தார் பிரகாஷ் காரத். அதுமட்டுமின்றி, யெச்சூரி்க்கு மாநிலங்களவையில் மூன்றாவது வாய்ப்பு கொடுக்க விரும்பிய மேற்குவங்க மாநிலக் குழுவின் தீர்மானத்தையும் எதிர்த்தார்.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸை முற்றாக விலக்கிவிட்டு மதவெறி அபாயத்தை தடுக்கமுடியாது என்று யெச்சூரி ஒரு அறிக்கையை முன்வைத்தார். இந்த இரு அறிக்கைகளும் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் விவாதத்துக்கு விடப்பட்டது.

 

இந்த முக்கியமான விஷயத்தில் அகில இந்திய மாநாடு என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அறிக்கை மீது ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று பல்வேறு மாநிலக் குழுக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், அதை யெச்சூரி ஏற்கவில்லை. அது கட்சியின் வெளிப்படைத் தன்மையை சீரழிக்கும் என்று தெரிவித்தார்.

 

இதையடுத்தே, பிரகாஷ் காரத்தின் அறிக்கையில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி இல்லை என்ற வாசகம் ஏற்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ளலாம் என்ற யெச்சூரியின் வாசகம் இணைக்கப்பட்டது. இது சிபிஎம் வரலாற்றில் முக்கியமான முடிவாக கருதப்படுகிறது. பாஜகவையும் காங்கிரஸையும் சமதூரத்தில் வைப்போம் என்ற சிபிஎம்மின் நிலைப்பாடு இதன்மூலம் மாறுகிறது. அதாவது, தேவைப்பட்டால், மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரஸுடன்கூட சிபிஎம் உடன்பாடு வைக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.

 

என்றாலும், இப்போதும் கட்சியில் பெரும்பான்மை நிர்வாகிகள் பிரகாஷ் காரத்தின் ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். இது யெச்சூரியை சுதந்திரமாக செயல்பட விடுமா என்று தொண்டர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால், காலில் கட்டப்பட்ட இரும்புக்குண்டை தூக்கி எறிந்துவிட்டு செயல்பட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

பிரகாஷ்காரத் மற்றும் பிருந்தா காரத்தின் ஆதிக்கம் இந்த மாநாட்டில் எப்படியெல்லாம் எதிரொலித்தது என்பதை கேள்விப்படும்போது வேதனையாக இருக்கிறது. எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புகிறார்கள் மூத்த தோழர்கள்.

 

பிரகாஷ் காரத்திற்கு கேரளா மற்றும் ஆந்திரா மாநிலக்கிளைகள் ஆதரவாக இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்டோர் பிரகாஷ் காரத்தை ஆதரித்திருக்கிறார்கள். யெச்சூரியை மாற்றிவிட்டு, ஆந்திரா மாநிலச் செயலாளர் ராகவலுவை பொதுச்செயலாளராக கொண்டுவர வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் முன்மொழிந்திருக்கிறார்.

 

அப்போது பிரதிநிதிகள் மத்தியில் பெரும் குழப்பமும், யெச்சூரிக்கு ஆதரவான முழக்கமும் அதிகரித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

 

CPM

 

அரசியல் தலைமைக் குழுவிலிருந்து சுபாஷினி அலியை நீக்கிவிட்டு, உ.வாசுகியை கொண்டுவர பிருந்தா காரத் முயற்சி செய்திருக்கிறார். அதற்கும் கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. எனவே அதுவும் கைவிடப்பட்டிருக்கிறது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி, விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுத்த அசோக் தவாலேவை அரசியல் தலைமைக் குழுவிற்கு கொண்டுவர யெச்சூரியும் மத்தியக்குழுவில் இருந்த அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் முயற்சித்தனர். அந்த முயற்சியையும் பிரகாஷ் காரத் முறியடித்திருக்கிறார்.

 

CPM

 

மத்தியக்குழுவில் புதிதாக இணைக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் யெச்சூரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. கட்சி வரலாற்றில் முதல் முறையாக இந்த மாநாட்டில்தான், மத்தியக்குழுவிற்கு 20 சதவீதம் புதிய ஆட்களை தேர்வு செய்துள்ளனர். மத்தியக்குழு உறுப்பினர்களின் சராசரி வயதும் 65 முதல் 66க்கு குறைந்துள்ளது.

 

காங்கிரஸ் உறவுகுறித்த பிரகாஷ் காரத்தின் அறிக்கையில் திருத்தம் கொண்டுவருவது குறித்த விவாதத்தின்போது, கடுமையான விவாதங்கள் நடந்திருக்கின்றன. திருத்தத்தை ஏற்க மறுத்தால் கட்சி பிளவுபடும் அபாயம் வரை சென்றுள்ளது. இதையடுத்தே, திருத்தம் ஏற்கப்பட்டுள்ளது.

 

திருத்தம் ஏற்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் திமுகவுடனோ, காங்கிரஸுடனோ தேர்தல் உடன்பாடு ஏற்படுவதில் இருந்த தடங்கல் நீங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள் மூத்த தோழர்கள்.

 

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50 ஆண்டு வரலாற்றில் இதுவரை கட்சியின் அரசியல் தலைமக்குழுவில் இடம்பெறும் அளவுக்கு தலித் ஒருவரைக்கூட வளர்த்தெடுக்கவில்லையா என்ற கேள்விக்கு இந்த மாநாட்டிலும் பதில் இல்லை.

 

CPM

 

அதே சமயம், பிரகாஷ் காரத் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் முட்டுக்கட்டைகளை தகர்த்து, புதிய உத்வேகத்துடன் தொண்டர்களின் ஆதரவோடு கட்சியை வெகுஜனக்கட்சியாக யெச்சூரி மாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.