Skip to main content

மெக்ஸிகோவை கைப்பற்றிய கம்யூனிஸ்ட்!!!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

“அதிபர் மாளிகையில் குடியேறப்போவதில்லை. எனது சிறிய வீட்டிலேயே வசிப்பேன்” என்று அறிவித்திருக்கிறார் மெக்ஸிகோவின் புதிய அதிபர் ஓப்ரடார்.

 

lopez

 

 



சீரழிவின் உச்சத்தில்தான் மாற்றம் வரும் என்பார்கள். அத்தகைய ஒரு மாற்றம் மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஏற்பட்டிருக்கிறது.

 

மெக்ஸிகோவில் பூர்வகுடிகளின் நிம்மதியைக் கி.பி.1500 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் நாட்டவர்கள் சீர்குலைத்தார்கள். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஆஜ்டெக் பேரரசை வெற்றிகொள்ள முடியாத ஸ்பானியர்கள் குடிமக்களிடம் கொடிய பெரியம்மை கிருமிகளைச் செலுத்தி கொன்றார்கள். அன்றைக்கு அந்த பேரரசின் மொத்த ஜனத்தொகை 3 கோடி என்கிறார்கள். அவர்களில் ஒன்றரைக் கோடிப் பேரை பெரியம்மை நோய் காவுகொண்டது.

 

ஜனத்தொகை குறைந்தவுடன் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆஜ்டெக் பேரரசைக் கைப்பற்றினார்கள். அதன்பிறகு பூர்வகுடிகளை வைத்தே அந்த நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளையடித்து ஸ்பெயினுக்கு கொண்டுபோனார்கள்.

 

 



 

சுமார் 300 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு 1810 ஆம் ஆண்டு முதல் 1821 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து 1821 ஆம் ஆண்டு முதல் குடியரசு உருவானது. மன்னராட்சியுடன் இணைந்த அந்த பேரரசு 1846 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

 

பின்னர் 1846 முதல் 1867 ஆம் ஆண்டுவரை இரண்டாவது குடியரசு உருவானது. 1860 ஆம் ஆண்டு மெக்ஸிகோவை ஸ்பெயினிடமிருந்து பிரான்ஸ் கைப்பற்றியது. பிரான்ஸ் தலையீட்டில் புதிய ஜனாதிபதி ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்டது. மெக்ஸிகோ புதிய வசதிகளைப் பெற்றது. இந்தநிலையில்தான், 1910 ஆம் ஆண்டு மெக்ஸிகோ புரட்சி தொடங்கியது. 1920 ஆம் ஆண்டு புரட்சி முடிவுக்கு வந்தது. அப்போதிருந்து 1920 முதல் 2000 ஆம் ஆண்டுவரை அமைப்புரீதியிலான புரட்சிகர கட்சி என்ற ஒரே கட்சி அரசாங்கம் நடைபெற்றது. 2000 ஆம் ஆண்டு முதல் தேசிய நடவடிக்கை கட்சி ஆட்சிக்கு வந்தது. 2012 ஆம் ஆண்டு மீண்டும் அமைப்புரீதியிலான புரட்சிகர கட்சி ஆட்சியைப் பிடித்தது.

 

சுமார் 100 ஆண்டு மெக்சிகோ தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு 2018 ஜூலை மாதம் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபெஸ் அப்ரடார் தலைமையிலான ஜனநாயக புரட்சிக்கான கட்சி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துள்ளது. இவருக்கு ஆதரவாக இதுவரை இல்லாத அளவில் மெக்ஸிகோ வாக்காளர்களில் 54 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஆளுங்கட்சியாக இருந்த பிஆர்ஐ கட்சி 16.3 சதவீத வாக்குளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

trump


 

மெக்ஸிகோவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இடதுசாரி ஒருவர் மெக்ஸிகோ அதிபராக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. மெக்ஸிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் ஏழை உழைப்பாளி மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து வேலைதேடுவது வாடிக்கையாகிவிட்டது. சட்டவிரோதமாக குடியேறும் அந்த மக்களை ட்ரம்ப் அரசு சமீபகாலமாக கடுமையாக துன்புறுத்துகிறது. மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுவர் எழுப்பப்போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஓப்ரடார் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் நிலமையில் புதிய மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் மெகிஸிகோவில் போதை மருந்து உற்பத்தி, மற்றும் கடத்தல் மிகமோசமாக அதிகரித்துள்ளது. வேலையில்லாத ஏழைகள்தான் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்கள். நாட்டின் பொருளாதார நிலை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

 

இத்தகைய சூழலில், புதிய அதிபர் ஓப்ரடார், லத்தீன் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி அரசுகளுடன் இணைந்து மெக்ஸிகோவின் பொருளாதாரத்தை சீரமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசூலா, கியூபா, பொலிவியா, உருகுவே, அர்ஜெண்டினா, பிரேசில் சிலி, நிகரகுவா உள்ளிட்ட தென்னமெரிக்காவின் பெரும்பகுதி நிலப்பரப்புள்ள நாடுகள் இணைந்து தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

 

Obrador


 

உலகவங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் இவை தங்களுக்குள் உதவிக்கொள்ளும் வகையில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி உள்ளன. அந்தக் கூட்டமைப்பில் மெக்ஸிகோ விரைவில் சேரும் என தெரிகிறது. மெக்ஸிகோவின் பொருளாதார நிலையை சீரமைக்க முதல்கட்டமாக புதிய அதிபர் ஓப்ரடார் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

 

 

அரசு இல்லத்தில் குடியேறப்போவதில்லை. தனது சிறிய வீட்டிலேயே குடியிருக்கப்போவதாக அறிவித்தார். அரசு இல்லத்தை கலைக் கண்காட்சியகமாக மாற்றப்போகிறார். தனதுசம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதிபருக்காக வாங்கிய விமானத்தை விற்கப் போகிறார்.

 

அதிபரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. விரைவில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். 

 

 


 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.